Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஹேப்பி பர்த் டே... கெளதம் வாசுதேவ் மேனன்.. பிரேம்ஜி... குவியும் வாழ்த்து!
சென்னை: இன்று பல திரைபிரபலங்கள் தங்களது பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். ரசிகர்கள் மற்றும் திரைதுறை சார்ந்தவர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். பலரை போல் இல்லாமல் தனக்கென்று ஒரு பாணியை வைத்து இருப்பவர். இயக்கத்தில் இவர் காட்டும் வித்தியாசம் மற்றும் அதற்காக அவர் செய்யும் வேலை பலரையும் பிரம்மிப்பு அடைய செய்துள்ளது. இவரது படங்களில் பெண் கதாபாத்திரம் மிகவும் வலிமையாகவும் அழகாகவும் செதுக்கி இருப்பது இவரது சிறப்பு.

ஒரு இயக்குனர் தமிழ் சினிமாவில் க்ளாஸ் ஆகவும் சரி மாஸ் ஆகவும் சரி திரைப்படத்தை எடுக்க முடியும் என்றால் அது இவரால் தான் முடியும், மற்றும் அதே தமிழ் சினிமாவில் "நரேஷன்" முறையில் வித்தியாசம் காட்டி ரசிகர்களை மகிழ்வித்ததும் இவர் தான். கெளதம் வாசுதேவ் மேனன் படங்களில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும் மற்றும் அந்த வரிகள் காலம் கடந்தும் ஹிட் ஆகியுள்ளன.
வித்தியாசமாக தூய தமிழில் பெயரிட்டு ரசிகர்கள் மனதில் தனது படங்களால் ஒரு தனி இடத்தை பிடித்த இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு இன்று பிறந்த நாள் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர்/ இசை அமைப்பாளர் பிரேம் ஜி - சிங்கிள்ஸ்களின் தலைவன் பிரேம் ஜிக்கு இன்று பிறந்த நாள். இசை குடும்பத்தில் இருந்து வந்த இரண்டாவது வாரிசு. இயக்குனர், பாடலாசிரியர் கங்கை அமரனின் இரண்டாவது மகன் தான் பிரேம் ஜி, இசை என்பது இவருக்கு குழந்தையிலே இருந்து அத்துப் படி பல திரைபடங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.
ஆழமான
காதலை
சொல்லும்..
ஶ்ரீகாந்தின்
உன்
காதல்
இருந்தால்..
ஹாட்
பிக்ஸ்!
Recommended Video
தனது நடிப்பால் பலரையும் சிரிக்க வைத்துள்ளார் மற்றும் இவரது அண்ணா வெங்கட் பிரபு கதை இல்லாமல் கூட படத்தை எடுப்பார், ஆனால் பிரேம் ஜி இல்லாமல் எடுக்கவே மாட்டார் அந்த அளவிற்கு ஒற்றுமை மற்றும் தம்பியின் கதாபாத்திரம் அந்த அளவிற்கு தேவை. தனது சகோதரர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு பல படங்களில் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பாடுவது என்று உதவியாக இருந்துள்ளார் பிரேம் ஜி, இன்று இவரது பிறந்த நாளை முன்னிட்டு பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பல ரசிகர்கள் ஹாப்பி பர்த்டே டு யு எங்கள் தலைவனுக்கு என்று வாழ்த்தி வருகிறார்கள்.