For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இயக்குநர் ஹெச். வினோத்தின் சிஷ்யனும் இயக்குநராகிட்டாரு.. பக்கா ரோட் மூவியாக வெளியாக உள்ள ‘துரிதம்’

  |

  சென்னை: சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஹெச். வினோத்தின் உதவி இயக்குநர் சீனிவாசன் இயக்கி உள்ள 'துரிதம்' திரைப்படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.

  'சண்டியர்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெகன் ஹீரோவாகவும், மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்ற ஈடன் நாயகியாகவும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

  இந்த படம் செம பக்காவான ரோட் மூவியாக உருவாகி உள்ளதாகவும் படத்தின் சூட்டிங்கின் போது பட்ட கஷ்டங்களையும் படக்குழு கூறியிருப்பதை இங்கே காண்போம்..

  சூர்யா மீது அந்தளவு பாசம் இல்லை. எனக்கே சூர்யாவை தெரியவில்லை... நடிகர் கார்த்தியின் ஷாக்கிங் statementசூர்யா மீது அந்தளவு பாசம் இல்லை. எனக்கே சூர்யாவை தெரியவில்லை... நடிகர் கார்த்தியின் ஷாக்கிங் statement

  ஹெச். வினோத் சிஷ்யன்

  ஹெச். வினோத் சிஷ்யன்

  இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், வெற்றிமாறன், அட்லி உள்ளிட்டவர்களின் உதவி இயக்குநர்கள் தொடர்ந்து இயக்குநர்களாகி தமிழ் சினிமாவை அசத்தி வரும் நிலையில், இயக்குநர் ஹெச். வினோத்தின் உதவி இயக்குநரான சீனிவாசனும் இயக்குநராக விரைவில் கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அவர் இயக்கத்தில் உருவாகி உள்ள படத்திற்கு 'துரிதம்' (Fast) என டைட்டில் வைத்துள்ளார்.

  ரோட் மூவி

  ரோட் மூவி

  பையா உள்ளிட்ட பல ரோட் மூவிக்கள் தமிழில் வெளியாகி இருந்தாலும், அது மற்ற ஊர்களில் தான் அதிகம் பயணிக்கும். ஆனால், இந்த துரிதம் படம் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களிலும் பயணிக்கும் கதையாக இயக்குநர் சீனிவாசன் உருவாக்கி உள்ளார். நிச்சயம் ரசிகர்களை கவரும் விதமாக இந்த படம் இருக்கும் என சமீபத்தில் படத்தைத் பார்த்த ஹெச். வினோத் வெகுவாக பாராட்டி உள்ளார்.

  நடிகர்கள்

  நடிகர்கள்

  'சண்டியர்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெகன் ஹீரோவாகவும், மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்ற ஈடன் நாயகியாகவும் இந்த படத்தில் நடித்துள்ளனர். கதாநாயகியின் தந்தையாக இயக்குநர் ஏ.வெங்கடேஷ், நாயகனின் நண்பனாக பாலசரவணன் மற்றும் பூ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார். புதியவரான நரேஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் மில்டனின் உதவியாளராக பணியாற்றிய வாசன் என்பவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை நாகூரான் கவனிக்க, ஆக்சன் காட்சிகளை மணி என்பவர் வடிவமைத்துள்ளார்.

  தயாரிப்பாளரான ஹீரோ

  தயாரிப்பாளரான ஹீரோ

  இந்த படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான 'சண்டியர்' ஜெகன் கூறும்போது, "உளுந்தூர்பேட்டையில் தங்கி, அங்கிருந்து சென்னை, மதுரை கோவை, சேலம் என அனைத்து திசையிலும் தினசரி பயணித்து படப்பிடிப்பு நடத்தினோம்.. குறிப்பாக வாகனங்கள் பரபரப்பாக சென்றுகொண்டு இருக்கும்போதே லைவ்வாக படப்பிடிப்பு நடத்தினோம்.. இதில் ஒரு காட்சியை படமாக்கும்போது சிறிய தவறு நிகழ்ந்தாலும், ரீடேக் எடுப்பது தான் எங்களுக்கு சவாலான விஷயமாக இருந்தது. காட்சியை படமாக்கிய இடத்திற்கே திரும்பி வருவதற்காக மீண்டும் சில கிலோமீட்டர்கள் பயணித்து சுற்றிவர வேண்டி இருந்தது.

  காப்பி பண்ணல

  காப்பி பண்ணல

  அதேபோல இப்படி ஒருமுறை மிகவும் சிரமப்பட்டு செலவு செய்து ரயில் சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை படமாக்கினோம்.. ஆனால் அந்த காட்சியை ஹார்ட் டிஸ்க்கில் காபி பண்ணிவிட்டோம் என நினைத்து தவறுதலாக அழித்து விட்டார்கள். மீண்டும் செலவு வேண்டாமே என்கிற எண்ணத்தில் அதை எப்படியாவது வேறு விதமாக மேட்ச் பண்ணிவிடலாம் என இயக்குநர் கூறினார். ஆனால் செலவானாலும் பரவாயில்லை என மீண்டும் அந்தக்காட்சியை மறுநாள் படமாக்கினோம்.

  ஹெச். வினோத் பாராட்டு

  ஹெச். வினோத் பாராட்டு

  இந்தப்படத்தை முடித்ததும், இயக்குநர் ஹெச்.வினோத்திடம் படத்தை போட்டு காட்டினோம்.. படம் பார்த்துவிட்டு நன்றாக வந்திருப்பதாக பாராட்டினார். மேலும், தான் சதுரங்க வேட்டை படம் எடுத்தபோது கூட, பலதரப்பட்ட கருத்துக்களை சொன்னார்கள். அதன் பிறகு தியேட்டர் சூழ்நிலையில் பொதுமக்கள் மத்தியில் வரும் போது மிகவும் பாராட்டப்பட்டது. அதனால் படம் எப்படி வந்துள்ளது என்கிற கருத்துக்களை தெரிந்துகொள்ள நினைத்தால் பொதுமக்களை அழைத்து தியேட்டரில் திரையிட்டு அவர்களது கருத்துக்களை கேளுங்கள்.. அதுதான் சரியாக இருக்கும் என ஆலோசனையும் கூறியிருக்கிறார் ஹெச். வினோத்.

  English summary
  Director H Vinoth assistant Srinivasan turns Director with Thuridham movie
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X