Don't Miss!
- News
கொல்கத்தாவில் பிரதமர் மோடி குறித்த ஆவணப் படம் வெளியீடு! டெல்லி பல்கலை வெளியே 144 தடை உத்தரவு!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Technology
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- Lifestyle
இட்லி, சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்... கத்திரிக்காய் தொக்கு
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
துணிவு படம் ரிலீஸ்.. சந்தோஷத்தில் சபரி மலைக்கு புறப்பட்ட எச். வினோத்.. டிரெண்டாகும் வீடியோ!
சென்னை: நடிகர் அஜித்துடன் தொடர்ந்து 3 படங்களில் பணியாற்றிய இயக்குநர் எச். வினோத் சபரி மலையில் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன. துணிவு படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலேயே ஐயப்ப மாலை அணிந்திருந்தார் இயக்குநர் வினோத்.
சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் எச். வினோத். அந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அடுத்து கார்த்தி உடன் தீரன் அதிகாரம் ஒன்று என்கிற தரமான சம்பவத்தை செய்திருந்தார்.
அதன் பின்னர் அஜித்தை வினோத் இயக்கப் போகிறார் என்கிற தகவல்கள் வெளியான நிலையிலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
எங்க வந்து யார்கிட்ட... துணிவு படத்தின் பிரேக்கில் வாரிசு பாடல்... சம்பவம் செய்த அஜித் ரசிகர்கள்

மோசடிகளை அடுக்கி
இயக்குநர் எச். வினோத் சமூகத்தில் நடக்கும் சின்ன சின்ன மோசடிகளை அடுக்கி தனது முதல் படமான சதுரங்க வேட்டையை எடுத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தார். ரைஸ் புல்லிங், எம்எல்எம், சிட் ஃபண்ட் உள்ளிட்ட பல விஷயங்களை பிரித்து மேய்ந்து செம டீட்டெய்லாக கதையை நோக்கி மட்டுமே பயணித்து ஹிட் கொடுத்தார்.

தீரன் அதிகாரம் ஒன்று
சதுரங்க வேட்டை படத்திற்கு பிறகு சூர்யாவை இயக்க நினைத்த வினோத்துக்கு கால்ஷீட் கிடைக்கவில்லை. உடனடியாக அவரது தம்பி கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். கத்தியை எப்படி பிடிக்க வேண்டும் என்கிற காட்சி முதல் கை ரேகை, பாவரியா கும்பல் என பதை பதைக்க வைத்திருந்தார்.

அஜித்துடன் ஹாட்ரிக்
அந்த இரு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி நடிகர் அஜித்தையும் கவர்ந்தது. உடனடியாக நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து வலிமை படத்தில் இருவரும் ஒன்றாக பணியாற்றினார்கள். வலிமை படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதும் எச். வினோத்தை நம்பி மீண்டும் துணிவுடன் அஜித் - வினோத்தின் ஹாட்ரிக் கூட்டணி அரங்கேறியது.

மைக்கேல் ஜாக்சன்
நடிகர் அஜித்தின் நடனம் குறித்த ட்ரோல்கள் எழுந்து வந்த நிலையில், இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் என்கிற புனைவு கதாபாத்திர பெயரையே கொடுத்து வங்கியில் மூன் வாக் நடனத்தையெல்லாம் ஆட வைத்திருந்தார். ஆனால், அந்த நடனத்தை அஜித் சாரே விரும்பி ஆடியதாக தனது பேட்டியில் தெரிவித்து இருந்தார் வினோத்.

வங்கி மோசடி
சதுரங்க வேட்டை படத்தில் சின்ன லெவல் திருட்டுக்களை பற்றியும் மோசடிகளை பற்றியும் கையில் எடுத்து திரை வழியாக பேசிய இயக்குநர் எச். வினோத் இந்த முறை வலுவாக வங்கிகளில் நடைபெறும் மியூச்சுவல் ஃபண்ட், மினிமம் பேலன்ஸ், கிரெடிட் கார்டு மோசடிகள் குறித்து துணிவுடன் பேசி உள்ளார்.
|
சபரி மலையில் வினோத்
துணிவு படம் வெற்றிகரமாக வெளியாகி திரையரங்குகளில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்து வரும் நிலையில், சபரி மலைக்கு கிளம்பி விட்டார். இரு முடி கட்டி சபரி மலையில் இயக்குநர் வினோத் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

அடுத்த படம் யாருடன்
ஏகே 62 படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் உடன் 4வது முறையாக இயக்குநர் எச். வினோத் இணைவார் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மேலும், கமல்ஹாசன் உடன் ஒரு படம் பண்ணப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சபரி மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வரும் போது அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.