twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காவல் துறைக்கு நன்றி… சில்லுக்கருப்பட்டி இயக்குனர் ட்விட்!

    |

    சென்னை : இயக்குனர் ஹலிதா ஷமீம் தமிழ்நாடு காவல் துறைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

    Recommended Video

    Angel Messaged | Sillu Karuppatti Halitha Flooded with love

    தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் நம்மை கவர்ந்து இருக்கும் அது போல நம்மை கவர்ந்த படங்கள் நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும், உணர்வை தூண்டவும் வைக்கும். பல விதமான திரைப்படங்கள் குறிப்பிட்ட மக்களை கவர்ந்திழுக்கும் சக்தியை கொண்டது. ஒரு குறிப்பிட்ட சூழலில் எடுக்கப்பட்ட படம் அதே போன்ற சூழலில் இருக்கும் மனிதர்களை வெகுவாக கவரும்.

    Director Halitha Shameem thanks the Tamil Nadu Police Department

    இன்னும் சில படங்கள் நம்மை அந்த சூழலில் வாழும் மனிதனை போலவே ஆக்கிவிடும். அந்த வகையில் நம் நேரத்தை மகிழ்ச்சியாக்க பார்க்கும் மசாலா படங்கள் கூட சில காலங்கள் மட்டுமே நமக்கு நினைவில் இருக்கும். ஆனால் நம் உணர்ச்சியை தொட்ட படங்கள் எதுவும் நம்மை விட்டு நீங்குவதில்லை என்பதே உண்மை. அப்படிப்பட்ட படங்கள் பல திரையரங்குகளில் எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓடவில்லை என்பதும் உண்மை.

    Director Halitha Shameem thanks the Tamil Nadu Police Department

    ஆனால் இது போன்ற உணர்ச்சிகளை மக்களிடையே சேர்க்க வேண்டும் ஆனால் அனைவராலும் ரசிக்கப்படவும் வேண்டும். இவை இரண்டும் கலந்து நம் மனதை லேசாக்கிய படம்தான் சில்லுக்கருப்பட்டி. 2019ஆம் ஆண்டின் அனைத்து படங்களும் வெளியாகிய நிலையில் வருடத்தின் கடைசி மாதத்தில் நம்மை மகிழ்விக்க வந்த படம்தான் சில்லுக்கருப்பட்டி. மனதை வருடும் நான்கு காதல் கதைகள் சேர்ந்த முழு உருவம் சில்லுக்கருப்பட்டி ஆகும்.

    Director Halitha Shameem thanks the Tamil Nadu Police Department

    பல குட்டி அழகான கதைககளை - நான்காக பிரித்து ஒரு அற்புதமான விருந்து வைத்தார். குப்பை பொறுக்கும் சிறுவனின் சொல்ல முடியாத காதல் ஒரு பணக்கார வீட்டு சிறுமியை போய் சேர்ந்ததாஎன்பதை பற்றி 'பின்க் பேக்' என்ற கதை, இரண்டாவதாக எதார்த்த சந்திப்பு காதலாக மாறி ஒரு மீம் கிரியேட்டரின் புற்று நோய் சரியானதா? தான் காதலிக்கும் பெண்ணுடன் சேர்ந்தானா என்பதை பற்றி ஒரு 'காக்கா கடி'என்ற கதையும்.

    Director Halitha Shameem thanks the Tamil Nadu Police Department

    அடுத்த படியாக வயதானாலும் காதலின் ஈரம் மனிதர்களுக்கு இருக்கும் என்பதை பற்றிய 'டர்டல் வால்க்' எனும் கதை மற்றும் அழகான அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை எப்படி சலிப்பு தட்டி மீண்டும் கணவன் மனைவி காதல் கொள்கிறார்கள் என்பதை பற்றி 'ஹே அம்மு'எனும் கதை போன்ற நான்கு வித்தியாசமான கோணங்களில் நான்கு கேமரா மேன்களை வைத்து எடுக்கப்பட்ட படம்தான் சில்லுக்கருப்பட்டி.

    Director Halitha Shameem thanks the Tamil Nadu Police Department

    இந்த படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் ஆரம்ப காலத்தில் புஷ்கர் காயத்ரி, மிஷ்கின் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர் அதன் பின் பூவரசன் பீப்பீ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் சில வருடங்கள் கழித்து இந்த சில்லுக்கருப்பட்டி என்ற அழகான இனிப்பை வழங்கினார். பலராலும் பெரிதும் பேசப்பட்ட இந்த படம் வெளியானதிலிருந்து இன்று வரை பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

    பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசித்த இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ஹலிதா ஷமீம் பலராலும் அறியப்படும் இயக்குனராக மாறியுள்ளார்.

    Director Halitha Shameem thanks the Tamil Nadu Police Department

    தமிழ்நாடு காவல் துறை சமூக விழிப்புணர்வு என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்றை நடித்தியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த போட்டிக்கு அனுப்பப்பட்ட படைப்புகளில் சிறந்த படங்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஹலிதா ஷமீம் அவர்களுக்கு கொடுத்துள்ளனர். இதனையடுத்து தமிழ் நாடு காவல் துறைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

    கும்கி நாயகி அல்லிக்கு இன்றுடன் 24 வயசு..விஐபிக்கள் வாழ்த்து!கும்கி நாயகி அல்லிக்கு இன்றுடன் 24 வயசு..விஐபிக்கள் வாழ்த்து!

    சில்லுக்கருப்பட்டி என்ற ஒரு படத்தின் மூலம் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கும் ஹலிதா அவர்களுக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர், இவர் மேலும் பல சாதனைகளை புரிய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    English summary
    Director Halitha Shameem thanks the Tamil Nadu Police Department
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X