யானை வந்திடுச்சு...அருவா எப்போ சார் வரும்...ஓப்பனாக பதில் சொன்ன ஹரி

சென்னை : தமிழ் சினிமாவின் குடும்ப சென்டிமென்ட் டைரக்டர் என்றால் அது ஹரி. சிங்கம் 3 பாகங்களை எடுத்து ஹிட் கொடுத்த ஹரி, வரிசையாக பல படங்களை இயக்கினார்.

2018 ம் ஆண்டு விக்ரம் நடித்த சாமி 2 படத்தை இயக்கினார் ஹரி. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதோடு தோல்வி படமாகவும் அமைந்தது. இதனால் அதற்கு பிறகு படம் ஏதும் இயக்காமல் இருந்தார் ஹரி.

நான்கு ஆண்டு இடைவேளைக்கு பிறகு தற்போது அருண் விஜய்யை வைத்து யானை படத்தை இயக்கி உள்ளார். குடும்ப, ஆக்ஷன் சென்டிமென்ட் படமான இந்த படம் நேற்று தியேட்டரில ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து வகையிலும் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.

முடங்கி கிடக்கும் அருவா

முடங்கி கிடக்கும் அருவா

ஜுன் மாதமே ரிலீஸ் செய்ய வேண்டிய யானை படம், விக்ரம் படத்திற்காக இரண்டு வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டு நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் சுர்யாவை வைத்து தான் எடுப்பதாக இருந்த அருவா படம் பற்றி பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசி உள்ளார் ஹரி. யானை படத்திற்கு முன்பே அருவா படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டு, பிறகு அந்த படம் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஓப்பனாக ஹரி சொன்ன விஷயம்

ஓப்பனாக ஹரி சொன்ன விஷயம்

இது பற்றி ஹரி தனது பேட்டியில், யானை படத்தின் கதையும் சுர்யாவிடம் அருவா படத்திற்காக நான் சொன்ன கதையும் ஒன்று கிடையாது. சிலர் சொல்கிறார்கள். அருவா படத்தின் கதையில் தான் அருண் விஜய் நடித்துள்ளார் என்று. அது உண்மை கிடையாது. யானை முற்றிலும் மாறுபட்ட கதை.

அருவா கைவிடப்படவில்லை

அருவா கைவிடப்படவில்லை

அருவா படம் கைவிடப்படவில்லை. இப்போதும் அந்த கதை அப்படியே தான் உள்ளது. அந்த படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான். சுர்யா அடுத்தடுத்த பல படங்களில் பிஸியானதால் அந்த படத்தை தொடர முடியவில்லை. பல காரணங்களால் அந்த படத்தின் ஷுட்டிங் தள்ளி போகிறது. ஆனால் சரியான நேரத்தில் துவங்கப்படும்.

பான் இந்தியா படமா வருமா

பான் இந்தியா படமா வருமா

ஆரம்பத்தில் இந்த படத்தை தமிழ், தெலுங்கில் தான் எடுப்பதாக இருந்தோம். ஆனால் தற்போது பான் இந்தியா படங்கள் வருவது அதிகரித்து விட்டது. சுர்யாவும் பான் இந்தியன் ஸ்டாராகி விட்டார். அதனால் இரு மொழிகளில் மட்டும் எடுப்பதா அல்லது வடஇந்திய ஆடியன்சையும் கவரும் வகையில் பான் இந்தியா படமாக எடுப்பதா என தெரியவில்லை. நான் அதை பற்றி சிந்திக்க துவங்கினால் என்னால் திரைக்கதையை சரியாக அமைக்க முடியாது. தடுமாற்றம் ஏற்படும்.

எதுவும் பிளான் பண்ணல

எதுவும் பிளான் பண்ணல

நான் திரைக்கதையை அமைக்கிறேன். கதை ஏற்றாதாக உருவாகும் போது பான் இந்தியா படமா இல்லையா என்பது பற்றி தீர்மானிக்க நினைத்துள்ளேன். யானை குட பிற மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டுள்ளோம். அது போல் கதை வடஇந்திய ரசிகர்களையும் சென்றைடையும் வகையில் திரைக்கதை அமைந்தால், மற்ற மொழிகளுக்கும் கொண்டு செல்வோம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X