Don't Miss!
- Technology
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
- News
"பூப்போட்டாராமே".. ஓபிஎஸ்ஸூக்கு "வெள்ளைப்பூ" தந்த பேச்சியம்மாள்.. அதுவும் 3 முறை.. ஹேப்பியில் பன்னீர்
- Lifestyle
ஆண்களே! உங்க விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்கணுமா? அதுக்கு இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஸ்கிரிப்ட் வொர்க் எல்லாம் ஆரம்பிச்சாச்சு.. தளபதி67 குறித்து லோகேஷ் அப்டேட்.. எப்ப சார் அறிவிப்பீங்க!
சென்னை : நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளார் விஜய்.
இந்தக் கூட்டணி முன்னதாக மாஸ்டர் படத்தில் இணைந்துள்ள நிலையில், தளபதி 67 குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர்
விஜய்
சேதுபதிக்கு
எதிரான
வழக்கு
ரத்து..சென்னை
உயர்நீதிமன்றம்
அதிரடி
உத்தரவு!

வாரிசு படம்
நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, குஷ்பூ, ராதிகா சரத்குமார், ஷாம், ஜெயசுதா என நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ள படம் வாரிசு. இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த மாதம் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

ஐதராபாத்தில் சூட்டிங்
இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து டைட்டில் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்து வரும் நிலையில், அவர் டைட்டில் பாடல் உள்ளிட்ட 4 பாடல்களை முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குடும்ப சென்டிமெண்ட் படம்
குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து விஜய்யின் வாரிசு படம் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விஜய் படங்களுக்கே உரிய ஆக்ஷன், என்டர்டெயின்மெண்ட், காமெடி என அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கும் என்று படக்குழு உறுதிப்பட தெரிவித்துள்ளது. குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து விஜய்யின் வாரிசு படம் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விஜய் படங்களுக்கேயுரிய ஆக்ஷன், என்டர்டெயின்மெண்ட், காமெடி என அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கும் என்று படக்குழு உறுதிப்பட தெரிவித்துள்ளது.

தளபதி 67 குறித்த லோகேஷ் அப்டேட்
இந்தப் படத்தையடுத்து நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜுடன் தளபதி 67 படத்தில் இணைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், அதுகுறித்த அறிவிப்பை தயாரிப்புத் தரப்பு இன்னும் வெளியிடாமல் உள்ளது. ஆனால் இந்தப் படம் குறித்து அவ்வப்போது லோகேஷ் அப்டேட் தெரிவித்து வருகிறார்.
|
அறிவிப்பிற்காக வெயிட்டிங்
ஆனாலும் படம் குறித்து முறையான அறிவிப்பு வெளியானவுடன் தான் மற்ற விஷயங்கள் குறித்து பேச முடியும் என்றும் அவர் கூறி வருகிறார். ஆனால் படத்தின் எழுத்து வேலையை தான் துவங்கி கடந்த 10 நாட்களாக மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விக்ரம் படத்தின் சக்சஸ் முடிந்து தற்போது விஜய் படத்திற்கான வேலைகளில் தான் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் படம்குறித்து முறையான அறிவிப்பு வெளியானவுடன்தான் தான் மற்ற விஷயங்கள் குறித்து பேச முடியும் என்றும் அவர் கூறிவருகிறார். ஆனால் படத்தின் எழுத்து வேலையை தான் துவங்கி கடந்த 10 நாட்களாக மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விக்ரம் படத்தின் சக்சஸ் முடிந்து தற்போது விஜய் படத்திற்கான வேலைகளில் தான் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காத்திருக்க சொன்ன லோகேஷ்
ஆனால் தயாரிப்பு தரப்பு படம்குறித்த முறையான அறிவிப்பை வெளியிட்டவுடன் தான் படம் குறித்து சொல்ல முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் இவ்வளவு நாட்கள் வெயிட் செய்த ரசிகர்கள் இன்னும் சிறிது நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.