»   »  நல்ல மனிதனுக்கு உதாரணம் விஜய்!- இயக்குநர் மகேந்திரன்

நல்ல மனிதனுக்கு உதாரணம் விஜய்!- இயக்குநர் மகேந்திரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மக்கள் மனதில் என்றும் வாழும் படங்களைத் தந்த இயக்குநர் மகேந்திரன். முதல் முறையாக விஜய்யின் தெறி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில், அசப்பில் கபாலி ரஜினி மாதிரி காட்சி தரும் மகேந்திரன், தெறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசினார்.


Director Mahendiran hails Vijay

அவர் கூறுகையில், "என்னுடைய வாழ்க்கையே மிகவும் திருப்புமுனை நிறைந்தது. நான் சினிமாவுக்கு வந்தது, இயக்குநரானதெல்லாம் எதிர்ப்பாராத திருப்பு முனைகள்.


இந்த வயதில் நான் விஜய் படத்தில் நடிப்பேன் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.


கடவுள் மிகவும் அற்புதமானவர். தாணு இப்படத்தில் என்னை நடிக்க அழைத்தபோது, நீங்கள் உங்க படத்துல உலகத்தை காட்டினீங்க. நான் இந்த உலகத்துல உங்கள நடிகனா காட்ட ஆசைப்படுறேன்னு சொன்னார்.


எனக்கு நடிக்க வரும்னு எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் தாணு சாருக்காக நடித்தேன். விஜய்யும் நான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக அவர் கூறினார். இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது.


நல்ல மனிதனுக்கு ஒரு எடுத்துக்காட்டு விஜய். விஜய் எவ்வளவுதான் உயரத்திற்கு சென்றாலும், ரொம்பவும் அமைதியான நபர். தன் நிலை மாறாதவர்," என்றார்.

English summary
Director Mahendiran hailed actor Vijay as a best example for good human being.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil