»   »  இயக்குநர் மகேந்திரன் நடிப்பைப் பார்த்து பிரமித்த விஜய் 59 குழு!

இயக்குநர் மகேந்திரன் நடிப்பைப் பார்த்து பிரமித்த விஜய் 59 குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மூத்த இயக்குநரான மகேந்திரன் விஜய் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் என்பது பழைய செய்தி.

ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரது நடிப்பைப் பார்த்து மொத்த குழுவுமே பிரமித்துப் போயிருக்கிறது.

"எந்தக் காட்சியாக இருந்தாலும் அதிகபட்சம் இரண்டு டேக்தான். பெரும்பாலும் முதல் டேக்கிலேயே நினைத்ததைவிட பிரமாதமாக நடித்துக் கொடுத்துவிடுவார். அடுத்த ஆண்டு அத்தனை விருதுகளையும் மகேந்திரன் சார்தான் பெறப்போகிறார். இத்தனை ஆண்டுகள் அவர் நடிக்காமல் போனது எவ்வளவு பெரிய நஷ்டம்," என்கிறார்கள் படக்குழுவினர்.

Director Mahendiran stuns Vijay 59 crew

கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை அட்லீ இயக்குகிறார். எமி ஜாக்ஸன் மற்றும் சமந்தா நாயகிகளாக நடிக்கின்றனர்.

படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசரை தீபாவளியன்று வெளியிடப் போகிறார்களாம்.

படத்துக்கு தற்காலிகமாக காக்கி என தலைப்பிட்டுள்ளனர். பின்னர் மாறினாலும் மாறலாம்!

English summary
The entire crew of Vijay's Kakki movie has bowled over by the excellent performance of director Mahendiran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil