twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்கள் உருவாக வேண்டும்- இயக்குநர் மகேந்திரன்

    By Shankar
    |

    சென்னை: நம் மண்ணின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் படங்கள் இந்திய சினிமாக்களில் உருவாக வேண்டும் என திரைப்பட இயக்குநர் மகேந்திரன் வலியுறுத்தினார்.

    12-ஆவது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த திரைப்பட விழா வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    Director Mahendiran urges to make films reflection our culture

    தொடக்க நிகழ்ச்சியில், தமிழக செய்தித் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, இயக்குநர் மகேந்திரன், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    விழாவில் இயக்குநர் மகேந்திரன் பேசியதாவது:

    உலக சினிமாக்கள் வேறு, இந்திய சினிமா உலகம் வேறு. உலக சினிமாக்கள் தெரிந்த அளவுக்கு இந்திய சினிமா உலகம் பற்றி எனக்குத் தெரியாது. ஒட்டுமொத்த இந்திய சினிமா இப்படித்தான் இருக்குமா என்று சொல்ல முடியாத அளவுக்கு சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

    Director Mahendiran urges to make films reflection our culture

    இயக்குநர் சத்யஜித்ரே படங்களைப் பின்பற்றி படங்களை எடுக்க பலர் முன்வந்தாலும் கூட பரிபூரணமாக இந்திய சினிமா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கான அடையாளம் இல்லை. இன்றைக்கு வரைக்கும் நாம் டூயட்தான் பாடிக்கொண்டு இருக்கிறோம். இதை யார் கேட்பது? சினிமா என்றால் டூயட் இருக்க வேண்டுமா என்ன?

    அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி நம்மிடையே அபார திறமைமிக்க இயக்குநர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை திரும்பத் திரும்ப டூயட்டுகளுக்கும் குழு நடனங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால் என்ன லாபம் அடைந்து விட்டோம் என்ற சந்தேகத்துக்கு நான் வருவது உண்டு.

    இன்றைக்கு வரைக்கும் உலக சினிமாக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். சமீபத்தில் கூட துருக்கி நாட்டில் உருவான "டவர் வாட்ச்' என்ற படம் என்னை பிரமிக்க வைத்தது. நம்முடைய சினிமா சிந்தனையை, ஞானத்தை அதன் மேன்மையை பிரதிபலிக்க உலக நாடுகள் தயாரிக்கும் பல படங்களைப் பார்க்க வேண்டியது அவசியம்.

    Director Mahendiran urges to make films reflection our culture

    அதற்கு முன்பாக நாம் நமது சமூகத்தை ஆழமாகப் பார்க்க வேண்டும். நம்மைச் சுற்றிப் பார்க்க வேண்டும். உலக சினிமாக்கள் எல்லாம் அந்தந்த மண்ணின் கலாசார மகத்துவத்தை எடுத்துரைக்கின்றன. அதேபோல, நம் நாட்டின் கலாசாரத்தையும், அதன் மேன்மையையும் எடுத்துக்காட்டும் விதத்தில் இந்திய சினிமாக்கள் உருவாக வேண்டும். அது நம்மால் முடியும். ஆனால் அதைச் செய்ய மறுக்கிறோம்.

    இந்த சர்வதேசத் திரைப்பட விழா பல சிரமங்களைக் கடந்து நடந்து கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி. இதை முன்னெடுத்துச் செல்லும் அனைவருக்கும் நன்றி. சினிமா உலகம் பற்றி தெரிந்து கொள்ளாதது எனது பலம்; அதுவே எனது பலவீனமும்கூட. சர்வதேச திரைப்பட விழாக்கள் சென்னையில் மட்டுமே நடைபெறுகின்றன. சென்னை ரசிகர்களின் சினிமா தாகத்தை மட்டுமே தீர்த்து வைக்கின்றன. இது போன்ற விழாக்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்களையும் சென்று சேர வேண்டும். அங்குள்ள ரசிகர்களுக்கும் பயனளிக்க வேண்டும்," என்றார் இயக்குநர் மகேந்திரன்.

    தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் மானியம்:

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், "இந்தோ சினி அப்ரிசியேஷசன்' அமைப்பு தமிழக அரசுடன் இணைந்து சென்னை சர்வதேச திரைப்பட விழாக்களை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதற்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள 12-ஆவது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது," என்றார்.

    இந்த விழாவில் 50 நாடுகளைச் சேர்ந்த 170-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படவுள்ளன.

    English summary
    The 12th Chennai International Film Festival has been inaugurated by Minister Rajendira Balaji on Thursday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X