twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன்… கோட்டை நகரான குவாலியரில் இறுதிகட்ட படப்பிடிப்பு !

    |

    சென்னை : பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் உள்ள ஆர்ச்சா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

    திருமணத்தை நிறுத்தியது இதற்காகதானா? தனுஷ் பட நடிகை ஷேர் செய்த போட்டோ.. ஜெர்க்கான நெட்டிசன்ஸ்! திருமணத்தை நிறுத்தியது இதற்காகதானா? தனுஷ் பட நடிகை ஷேர் செய்த போட்டோ.. ஜெர்க்கான நெட்டிசன்ஸ்!

    இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    கல்கியின் பொன்னியின் செல்வன்

    கல்கியின் பொன்னியின் செல்வன்

    அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். இந்த புதினத்தை படிக்கும் போது ஒவ்வொரு காட்சியும் கண் முன்தோன்றி மறையும். ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீரநாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிராயணம் செய்து கொண்டிருந்தான்... என அந்த காட்சியையும் அந்த வீர நாராயண ஏரியின் காட்சியை நம் கண் முன் தோன்ற வைத்து உள்ளத்தை வசீகரிக்கும் இதுதான் இந்த புதினத்தின் சிறப்பு.

    மணிரத்னத்தின் கனவுபடம்

    மணிரத்னத்தின் கனவுபடம்

    பலரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரைப்படமாக எடுக்க முயற்சி செய்தனர். ஆனால், அவர்களின் கனவு வெறும் கனவாக மட்டுமே இருந்த. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாகி வருகிறது. இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இதில் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

    ஏராளமான நட்சத்திரம்

    ஏராளமான நட்சத்திரம்

    இப்படத்தில் சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ்,பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ரியாஸ் கான், ஜெயராம், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஷோபிதா துலிபலா, கிஷோர், அஸ்வின், அர்ஜூன் சிதம்பரம், ரஹ்மான், மோகன் ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

    கேரக்டர்கள்

    கேரக்டர்கள்

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயரம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ் , வந்தியத் தேவனாக கார்த்தி,

    குந்தவையாக த்ரிஷா

    குந்தவையாக த்ரிஷா

    குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரம் ஒரு எதிர்மறையான கதாபாத்திரமாகும். மேலும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும், ஷோபிதா வானதியாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் மற்றும் பார்திபன் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர். சிவனடியார்களை அடியாள் அடிக்கும் வைணவ சாமியார் வேடத்தில் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்க உள்ளார். மேலும் விக்ரம் பிரபு கந்தன் மாறன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

    12 பாடல்கள்

    12 பாடல்கள்

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மொத்தம் 12 பாடல் இருப்பதாகவும், இதில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எட்டு பாடல்களை எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், கவிஞர் கபிலன் இரண்டு பாடல்களையும், வெண்பல கீதையன் ஒரு பாடலையும், வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து ஒரு பாடலையும் எழுதியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    ஏ.ஆர். ரஹ்மான் இசை

    ஏ.ஆர். ரஹ்மான் இசை

    தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

    ஹைதராபாத்தில் படப்பிடிப்பு

    ஹைதராபாத்தில் படப்பிடிப்பு

    இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முதலில் தாய்லாந்தில் தான் தொடங்கப்பட்டது. பின்னர், கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட அதன் பின் பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இதில், நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு நடித்தார். அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்ததை அடுத்து ஹைதராபாத் படப்பிடிப்பை தொடங்கினர்.

    மத்திய பிரதேசத்தில் படப்பிடிப்பு

    மத்திய பிரதேசத்தில் படப்பிடிப்பு

    பல கட்டங்களாக படப்பிடிப்பு நடந்து முடிந்து வருகிறது. தற்பொழுது படக்குழு மத்திய பிரதேசத்தில் உள்ள ஆர்ச்சா நகருக்கு சென்றுள்ளது. மத்திய பிரதேசத்தின் கோட்டை நகரம் என அழைக்கப்படும் இரண்டாவது பெரிய நகரமான குவாலியர் விமானநிலையத்தில் நடிகர் கார்த்தியுடனும், இயக்குனர் மணி ரத்னத்துடனும் நடிகர் பிரகாஷ் ராஜ் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.

    குவாலியர் கோட்டை நகரம்

    குவாலியர் கோட்டை நகரம்

    மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர், ஓர்ச்சா உலக பாரம்பரிய நகரமாகும். இதில், குவாலியர் கோட்டை 9 நுற்றாண்டில் நிறுவப்பட்டதாகும். குவாலியர் நகரம் அரண்மனைகள் மற்றும் கோவில்களுக்கு பெயர் பெற்றதாகும். இங்குள்ள சாஹூ பகுகா கோவிலில் அரிய வகையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன. மேலும், சமண சிலைகளும் , உயரமான கோட்டை சுவர்களும் உள்ளன. அதேபோல ஓர்ச்சா நகரிலும் பல கோயில்களும், அரண்மனைகளும் உள்ளன. வரலாற்றுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை இங்கு மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Legendary director Mani Ratnam’s dream project ‘Ponniyin Selvan shooting begin in Orchha, Madhya Pradesh.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X