»   »  ஆஸ்கார் நாயகனை அறிமுகப்படுத்திய மணிரத்தினம்... பிறந்தநாள் ஸ்பெஷல்!

ஆஸ்கார் நாயகனை அறிமுகப்படுத்திய மணிரத்தினம்... பிறந்தநாள் ஸ்பெஷல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இவருகிட்ட எப்படியாவது கேட்டுரனும்... எப்படி சார்.. இப்படி.. பேசாமலேயே பேச வக்கிறீங்க என்று.. ஒவ்வொரு வார்த்தையும் நிசப்தமா வந்தாலும் காதல் வசமாகுதுன்னு... அதிகமா இவரும் பேச மாட்டாரு, இவரோட கதாப்பாத்திரங்களும் பேசாது..

ஆனா, இவரோட படத்துல காதல், உணர்ச்சி எல்லாமே பொங்கும். இவரோட ஒவ்வொரு வார்த்தையும் மணி மணியா வரும் அவரோட பேருக்கு ஏத்த மாதிரி.. அவர்தான் இயக்குனர் மணிரத்னம்..

இன்று அவருடைய பிறந்த தினத்தில் அவரைப் பற்றியும், படங்கள் குறித்தும் பார்க்கலாம்.

மணிரத்னம் :

மணிரத்னம் :

கோபால ரத்னம் சுப்பிரமணியம் என்ற பெயரினை திரைக்காக மணி ரத்னம் என்று மாற்றிக் கொண்டவர். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அரியவகை பொக்கிஷங்களில் இவரும் ஒருவர். எங்கு திரும்பினும் திறமையையே முன்னிலை படுத்தும் கமல்ஹாசன் குடும்பத்தில் இருந்து பெண் எடுத்தவர்.

நட்பு :

நட்பு :

இயக்குனர் மணி ரத்னம் படம் இயக்குனா அந்த படம் கண்டிப்பா விருது வாங்கும், ஒரு வேலை மேடை விருது கிடைக்கலைனா, மக்களின் மனதிலாவது விருதினை வாங்காமல் ஓயாது. இவரு இல்லைனா, இவரோட வசனங்கள் இருக்காது, நட்புன்னா என்ன தெரியுமா உனக்கு? நண்பனா என்னனு தெரியுமா? சூர்யானா என்னனு தெரியுமா? உனக்கு என் உயிரையும் கொடுப்பேன், எடுத்துக்கோ எடுத்துக்கோன்னு இன்று வரை நட்பு வட்டாரங்களை கதற விடும் தளபதி படத்தை கொண்டாடிட்டு இருக்காங்க. கர்ணன் படத்தின் "ரீமேக்" தான். ஆனாலும் திறமையாக செய்து கைத்தட்டல்களை அள்ளிச் சென்றார்.

மௌன ராகம் :

மௌன ராகம் :

சொன்னாதான் காதலா.. உணரனும் பாஸ்.. அந்த உணர்ச்சியை அவ்ளோ அழகா யாராலையும் சொல்ல முடியாது. ஏற்கனவே காதல்ல விழுந்த ஒரு பொண்ணும், அந்த பொண்ணோட காதல மதிச்சு, தன்னோட காதல வெளிப்படுத்திக்க முடியாம, விலகி நிக்கிற புருஷனும்... மணிரத்னம் படத்துல தான் பாக்க முடியும். கடைசில இந்த ரெண்டு பேரும் காதல சொல்லவும் முடியாம, வெளிப்படுத்தவும் முடியாம, அது ஒரு உணர்ச்சி போராட்டம்னு கூட சொல்லலாம். நவீன காதல் காவியம் மெளன ராகம்.

அஞ்சலி :

அஞ்சலி :

ஒரு சின்ன குழந்தையை மட்டுமே மையமா வச்சு இப்படி ஒரு கதையை உருவாக்க முடியுமா..? அந்த மாதிரி பலரது கேள்விகளுக்கும், ஆச்சரியத்திற்கும் நடுவில் தன்னோட கதையில ஒரு சிலைய கூட நடிக்க வைக்க முடியும்ன்னு நிருபிச்சாரு மணிரத்தினம். அஞ்சலி குழந்தைகளையும், அவர்களின் மழலைகளையும் அவ்வளவு அழகாக சித்தரிக்க இவரால் மட்டுமே முடியும்.

ரோஜா :

ரோஜா :

ரோஜா படத்தில் மணி ரத்னம் இருவகையில் ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார். என்ன தெரியுமா.? ஒன்று ஒரு பெண் சாதுவாகவே இருக்க மாட்டாள், அவசியம் வந்தால், எவ்வாறு வேண்டுமானாலும் உருவெடுப்பாள். இன்னொன்று ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் அறிமுகமாகிய திரைப்படம். அப்படத்தில் வரும் பாடல்கள் ஆகட்டும், பின்னணி இசையாகட்டும் இன்று கேட்டாலும் மெய் சிலிர்க்கும். இதை விட என்ன வேண்டும்..

பம்பாய்:

பம்பாய்:

காதலில் மனம் ஒன்று பட்டாலே போதும்.. சாதிகள், மதங்கள் முக்கியமில்லை என்பதை அழகிய காதல் காவியமாக மணி ரத்னம் சித்தரித்த படம் தான். இப்படத்தில், மதங்களில் உள்ள வேறுபாடுகளையும் மீறி மதம் மாறி திருமணம் செய்த மனதினை கொண்டாடும் திரைப்படம்.

அலைபாயுதே :

அலைபாயுதே :

காதலிலும், திருமணத்திலும் ஒரு புது நடைமுறையை கொண்டு வந்த திரைப்படம். திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் வாழ்தல். இப்படத்தில், கதை தான் வித்தியாசம் என்றால், காதல் சொல்லும் முறை கூட சற்று வித்தியாசம் தான். இன்று கூட, பல இடங்களில் சக்தி, நா உன்ன விரும்பல, ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு பயமா இருக்கு என்று இளைஞர்கள் காதலை தெரிவிக்கின்றனர். கேட்டால் மணி ரத்னம் ஸ்டைலாம்..

கன்னத்தில் முத்தமிட்டால் :

கன்னத்தில் முத்தமிட்டால் :

வளர்ப்பு குழந்தைக்கும் வளர்ப்பு தாய் தந்தைக்கும் இடையில் நடக்கும் ஓர் உணர்வு போராட்டம் ஒருபுறமிருக்க, மறு புறம், இலங்கையில் ஈழ தமிழர் படும் அவதிகளை நம் கண் முன் காண்பித்தவர். அத்திரைப்படத்தில், உணர்வு போராட்டங்கள் மட்டுமின்றி உணர்ச்சி போராட்டங்களை நாம் காணும் பொழுது நம் கண்கள் நம் அனுமதியின்றியே அழ தொடங்கி விடும்.

ராவணன் :

ராவணன் :

ஒருவர் மனைவியை இன்னொருவர் கவர்வது என்றால் நமக்கு சட்டெரென்று நினைவில் உதிப்பது ராவணன் மட்டுமே. மணி ரத்னம் படத்தில் வந்த ராவணன் அடுத்தவரின் மனைவியை சிறை எடுத்தாலும், சீதையின் கண்களுக்கு யோக்கியமானவனாகவே காட்சியளித்தார். மணிரத்தினம் ரசிகர்களைக் கவர்ந்த படம் இது.

ஓகே கண்மணி :

ஓகே கண்மணி :

ஓ காதல் கண்மணி.. தொடர் தோல்விகளுக்கு அடுத்து இளைஞர்களிடையே கிளம்பிப் படையெடுத்து வரும் புதிய வகை உறவை மையமாக வைத்து எடுத்த படம் இது. எதிர் கருத்துக்கள், எதிர்ப்புகளை மீறி வெளிவந்த திரைப்படம். கல்யாணம் வேண்டாம்.. ஆனால், துணை வேண்டும்.. அவ்ளோ தான் கதை. பல இடங்களில் நடக்கும் கதையை தைரியமாக வெளிக்கொண்டு வந்தவர். ஆனாலும் கடைசியில் கல்யாணத்தில் கொண்டு போய் முடித்து விட்டார் மணி.

மூவர் கூட்டணி :

மூவர் கூட்டணி :

திரையுலகில் மணிரத்னம்- ஏஆர் ரஹ்மான் - வைரமுத்துவின் கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்திய கூட்டணிகளில் ஒன்று. பல வருடங்களாக தொடரும் கூட்டணி. இவர்களது கூட்டணி எந்த படத்தில் இணைந்தாலும், அத்திரைப்படம் பேசப்படுகிறது.

இப்படியே தொடரட்டும் இந்த இனிய கூட்டணி!

English summary
The Legendry Director Mani Rathnam's Birthday Today. We Wishes Happy Birthday to you sir..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil