twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காலத்தால் அழியாத கலைஞன்.. பிரதாப் போத்தனுக்கு இயக்குநர் மணிரத்னம் நேரில் அஞ்சலி!

    |

    சென்னை : நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

    Recommended Video

    Prathap pothen Passed Away | திரையுலகினர் இரங்கல் *Kollywood | Filmibeat Tamil

    அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    குஷ்பூ உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    பிரதாப் போத்தனின் திரைப்பயணம்.. எதார்த்த இயக்குநரின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் !பிரதாப் போத்தனின் திரைப்பயணம்.. எதார்த்த இயக்குநரின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் !

    பிரதாப் போத்தன் மறைவு

    பிரதாப் போத்தன் மறைவு

    நடிகரும் பிரபல இயக்குநருமான பிரதாப் போத்தன் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்திப் படங்களில் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது இயல்பான மற்றும் ஆக்ரோஷமான நடிப்புகளால் இவர் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தவர்.

    சிறப்பான இயக்குநர்களின் சாய்ஸ்

    சிறப்பான இயக்குநர்களின் சாய்ஸ்

    சமரசம் செய்துக் கொள்ளாத இயக்குநர்களின் முதல் சாய்சாக இருந்தவர்களில் பிரதாப் போத்தனும் ஒருவராக இருந்தார். இவரது அழியாத கோலங்கள், மூடு பனி போன்ற படங்கள் காலத்தால் அழியாத காவியங்களாக அமைந்தன. முதல் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கேரக்டரில் நடித்திருந்தார் பிரதாப் போத்தன்.

    மூடுபனி படம்

    மூடுபனி படம்

    இதேபோல சைக்கோ த்ரில்லர் படமான மூடுபனி க்ளைமேக்ஸ் காட்சியில் இவரது சிறப்பான நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ரஜினி, கமல் நடித்துவந்த காலகட்டத்தில் அவர்களை போல ஆக்ஷன், காமெடி என்று ரசிகர்களை இம்சிக்காமல் தன்னுடைய இயல்பான நடிப்பில் சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களை கவர்ந்தார்.

    பன்னீர் புஷ்பங்கள் படம்

    பன்னீர் புஷ்பங்கள் படம்

    பன்னீர் புஷ்பங்கள் படத்தில் ஆசிரியர் கதாபாத்திரத்தில் முன்னுதாரணமாக வாழ்ந்துக் காட்டினார். சிந்து பைரவி படத்தில் சுகாஹினியை காதலிக்கும் காதலர், பிரியசகி படத்தில் மாமனார், ராம் படத்தில் சைக்கியாட்ரிஸ்ட் என தான் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கு சிறப்பான நியாயம் செய்தார்.

    44 ஆண்டு திரைவாழ்க்கை

    44 ஆண்டு திரைவாழ்க்கை

    இவர் திரையுலகில் அறிமுகமாகி தற்போது 44 ஆண்டுகள் கடந்துள்ளன. இதில் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்ததுடன் நிறுத்திக் கொள்ளவில்லை பிரதாப் போத்தன். இவர் இயக்கத்தில் 10க்கும் மேற்பட்ட சிறப்பான படங்கள் வெளியாகியுள்ளன. இதில் முக்கியமாக கமலின் வெற்றி விழா படத்தை சொல்லலாம். இந்தப் படத்தில்தான் முதல்முறையாக ஸ்டெடி கேம் என்ற கேமரா பயன்படுத்தப்பட்டது.

    10க்கும் மேற்பட்ட படங்கள் இயக்கம்

    10க்கும் மேற்பட்ட படங்கள் இயக்கம்

    மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் இவர் படங்களை இயக்கியுள்ளார். மலையாளத்தில் டெய்சி, ரிதுபீடம், ஒரு யாத்ரா மொழி உள்ளிட்ட படங்களையும், தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, மைடியர் மார்த்தாண்டன், ஆத்மா, மகுடம், சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் உள்ளிட்ட படங்களையும், தெலுங்கில் சைதன்யா என்ற படத்தையும் இயக்கியுள்ளார் பிரதாப்.

    English summary
    Manirathnam, PC Sriram, Rajiv menon pays tribute to Prathap pothan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X