லூசிபர் தெலுங்கு ரீமேக்.. தனி ஒருவன் இயக்குனர் இயக்குகிறார்!

ஹைதராபாத் : அஜித்தின் வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வரும் நடிகர் சிரஞ்சீவி அந்த கதாபாத்திரத்திற்காக சமீபத்தில் மொட்டை அடித்த புகைப்படம் தாறுமாறாக வைரலானதைத் தொடர்ந்து இப்பொழுது மற்றுமொரு ரீமேக் திரைப்படத்தில் சஞ்சீவி கமிட்டாகியுள்ளார்.

எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் சிரஞ்சீவிக்கு இன்று வரை மாஸ் குறையாமல் இருக்கின்ற நிலையில் அனைத்து தரப்பு மக்களையும் கவருகின்றவாறு அடுத்தடுத்த திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கொரானாவால் பாதிக்கப்பட்டு பின் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ள சிரஞ்சீவி இப்பொழுது மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பல பாராட்டுகளை

பல பாராட்டுகளை

ஒவ்வொரு வருடமும் மலையாளத்தில் வெளியாகும் திரைப்படங்கள் இந்திய அளவில் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்று ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் சென்ற ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு என அனைத்து மொழி ரசிகர்களையும் ரசிக்க வைத்து மாபெரும் வெற்றி பெற்றது.

அதிக வசூல்

அதிக வசூல்

மோகன்லால் கதாநாயகனாக நடிக்க அனைவருக்கும் ஹீரோவாக மட்டும் பரிச்சயமான நடிகர் பிரித்விராஜ் முதல் முறையாக இயக்கி இருந்த இந்த திரைப்படம் வெளியாகி சக்கைப் போடு போட்டு வசூலை வாரி குவித்த நிலையில் 2019ஆம் மலையாளத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை லூசிபர் பெற்றுள்ளது.

முக்கியமான கதாபாத்திரம்

முக்கியமான கதாபாத்திரம்

அரசியல் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருந்த லூசிபர் திரைப்படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருக்க நடிகை மஞ்சுவாரியார், விவேக் ஓபராய், இந்திரஜித் சுகுமாரன், டோவினோ தாமஸ் என பல நடிகர்கள் இதில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார்

ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார்

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் பரபரப்பாக நடித்து வரும் சிரஞ்சீவி அந்த கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்து உள்ள நிலையில் இப்பொழுது லூசிபர் திரைப்படம் தெலுங்கில் உருவாக ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை

அதிகாரப்பூர்வ அறிவிப்பை

பெரும்பாலான தெலுங்கு காதல் திரைப்படங்களை தமிழில் இயக்கி வந்த இயக்குனர் மோகன் ராஜா இப்பொழுது லூசிபர் தெலுங்கு ரிமேக்கை இயக்க ஒப்பந்தமாகி இருக்க, நடிகர் சிரஞ்சீவியுடன் முதன்முறையாக இணைந்து பணியாற்றுவது பெருமையான விஷயம் என நெகிழ்ச்சியுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

அனைத்தும் பிளாக்பஸ்டர்

அனைத்தும் பிளாக்பஸ்டர்

சமீபகாலமாகவே தொடர்ந்து ரீமேக் திரைப்படங்களாகவே நடித்து வரும் சிரஞ்சீவிக்கு அவை அனைத்தும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது லூசிபர் திரைப்படமும் அவருக்கு மற்றுமொரு வெற்றித் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X