Just In
- 13 min ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 34 min ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 47 min ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
- 1 hr ago
பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்…. அருண்பாண்டியன் சிறப்பு பேட்டி
Don't Miss!
- News
வேடசந்தூர் யாருக்கு? மல்லுக்கட்டும் காங்.- உதயசூரியன் சின்னம் வரைந்து பிரசாரத்தில் குதித்த திமுக
- Education
UPSC 2021: ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Lifestyle
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்
சென்னை: விஷாலின் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மிஷகின் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்தப் படம் துப்பறிவாளன். இதில் கனியன் பூங்குன்றனாக அவர் நடித்திருந்தார்.
பிரசன்னா, அனு இம்மானுவேல், வினய், ஆண்ட்ரியா உட்பட பலர் நடித்திருந்தனர். அரோல் கரோலி இசை அமைத்திருந்தார்.

மிஷ்கின், விஷால்
தனது விஷால் பிலிம்பேக்டரி மூலம் நடிகர் விஷாலே படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தனர். அதன்படி மிஷ்கின், விஷால், பிரசன்னா இணைந்தனர். ஹீரோயினாக ஆஷ்யா நடிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

வாக்குவாதம்
இதில் ரகுமான், கவுதமி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அதிக பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது. ஒரு மாதத்துக்கும் மேல் அங்கு நடந்த படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் படத்தில் நடித்தவர்கள் சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்பட்டது.

பட்ஜெட் அதிகம்
அங்கு ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் படக்குழு சென்னைத் திரும்பியது. இதன் அடுத்த ஷெட்யூலுக்கு ரெடியான நிலையில் மிஷ்கின், தனக்கு அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம். இதையடுத்து விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதோடு போட்ட பட்ஜெட்டை விட, மேலும் பல கோடிகளை மிஷ்கின் அதிகப்படுத்தினாராம்.

மிஷ்கினை நீக்கினார்
ஏற்கனவே லண்டன் ஷெட்யூலில் பட்ஜெட்டை அதிகப்படுத்தி இருந்தாராம் மிஷ்கின். இதனால், பட்ஜெட்டை அதிகப்படுத்தினால் பைனான்ஸ் வாங்குவது கஷ்டம் என்றும் பிசினஸ் பண்ணுவதும் கடினம் என்றும் விஷால் சொன்னாராம். இதனால் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து படத்தில் இருந்து மிஷ்கின் விலக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் மிஷ்கினை படத்தில் இருந்து விஷால் நீக்கியுள்ளார். இதைப் படக்குழுவும் உறுதி செய்தது. இதையடுத்து படத்தை நடிகர் விஷாலே இயக்குவார் என்று தெரிகிறது.