அயலி வெப் சீரிஸ் ட்ரெய்லர் ரிலீஸ்... மார்டன் டிரஸ் பெண்களுக்கு அட்வைஸ் கொடுத்த இயக்குநர் நவீன்

சென்னை: ZEE-5 ஓடிடி தளம் தமிழில் தங்களது அடுத்த படைப்பாக அயலி என்ற வெப் சீரிஸ்ஸை தயாரித்துள்ளது.

பெண் கல்வி, அவர்களின் எதிர்கால கனவு ஆகியவற்றை பின்னணியாக வைத்து 8 எபிசோட்களாக உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ்ஸை முத்துகுமார் இயக்கியுள்ளார்.

இந்த வெப் சீரிஸ் வரும் 26ம் தேதி முதல் ஜீ 5 ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ள நிலையில், நேற்று இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அயலி வெப் சீரிஸ்ஸின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீன் இந்த ட்ரெய்லரை குறிப்பிட்டு பெண்களின் கல்வி குறித்து ட்வீட் செய்துள்ளார்.

ஜீ 5 ஓடிடியில் அயலி

ஜீ 5 ஓடிடியில் அயலி

தொடர்ந்து வெப் சீரிஸ் தயாரிப்பில் ஆர்வம் காட்டி ஜீ 5 ஓடிடி தளம், தற்போது அயலி என்ற இணையத் தொடரை தயாரித்துள்ளது. அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மாதவன், லிங்கா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் இந்த வெப் சீரிஸில் நடித்துள்ளனர். முத்துக்குமார் இயக்கியுள்ள அயலி வெப் சீரிஸ் 8 எபிசோட்களாக உருவாகியுள்ளது. வரும் 26ம் தேதி முதல் ஜீ 5 ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது அயலி. இந்நிலையில், நேற்று இந்தத் தொடரின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மருத்துவர் கனவில் தமிழ்ச் செல்வி

மருத்துவர் கனவில் தமிழ்ச் செல்வி

வீரப்பண்ணை என்ற கிராமத்தில் வசிக்கும் பெண்கள் வயதுக்கு வந்ததும் திருமணம் செய்துகொள்ள வேண்டும், அவர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டாம் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள தமிழ்ச் செல்வி என்ற இளம்பெண் டாக்டராக வேண்டும் என்ற ஆசையில் வயதுக்கு வந்ததை மறைத்து படிக்கிறார். தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடும் தமிழ்ச் செல்வியின் கதைதான் இந்த அயலி வெப் சீரிஸ். ட்ரெய்லர் மூலம் கவனம் ஈர்த்துள்ள அயலி வெப் சீரிஸ், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் நவீன் அட்வைஸ்

இயக்குநர் நவீன் அட்வைஸ்

இந்த தொடர் குறித்து பேசியுள்ள இயக்குநர் முத்துக்குமார், "வெகுஜனங்கள் விரும்பும் மாற்றத்தை பிரசாரமாக இல்லாமல் மக்களுக்கு கொடுக்க எடுத்திருக்கும் உண்மையான முயற்சி தான் அயலி. இந்தத் தொடர் பெண்களின் கல்வி, அதிகாரம், கனவுகளை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடும் வலிமையை கூறும் கதையாக இருக்கும். இந்த கதையை சொல்வதற்காக வாய்ப்பு கொடுத்த ZEE5-க்கு நன்றி" எனக் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த ட்ரெய்லரை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள மூடர் கூடம் பட இயக்குநர் நவீன் பெண்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

பெண்கள் மீதான ஒடுக்குமுறை

பெண்கள் மீதான ஒடுக்குமுறை

அதில், "பழக்கவழக்கம், பண்பாடு, கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்கள் மீதான ஒடுக்குமுறை இன்றும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. மாடர்ன் டிரஸ் போட்டு வேலைக்கு செல்லும் பெண்களையும் சேர்த்தே சொல்கிறேன். ஆனால் கல்வி + வேலைதான் விடுதலைக்கான முதற்படி" என பதிவிட்டுள்ளார். தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து முற்போக்கான கருத்துகளை பதிவிட்டு வருகிறார் நவீன். சமீபத்தில் வாரிசு படம் பார்த்த இஸ்லாமிய பெண் மிரட்டப்பட்டது பற்றியும் தனது டிவிட்டரில் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X