twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லா மத அடிப்படைவாதிகளும் இணையும் ஒரு புள்ளி பெண்ணடிமைத்தனம்.. தாலிபன்கள் குறித்து பிரபல இயக்குநர்!

    |

    சென்னை: எல்லா மத அடிப்படைவாதிகளும் கருத்து வேறுபாடின்றி இணையும் ஒரு புள்ளி பெண்ணடிமைத்தனம் என பிரபல இயக்குந்ர கடுமையாக சாடியுள்ளார்.

    Recommended Video

    Afghanistan-ல் மீண்டும் Sharia சட்டம்: முன்பு Taliban பெண்களுக்கு என்ன கட்டுப்பாடுகள் விதித்தார்கள்?

    மூடர் கூடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் நவீன் முகமதலி. வொய்ட் ஷேடோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் இயக்குநர் நவீன் முகமதலி.

    முதல்வர் இப்ப சொல்றார்... அஜித் அன்னிக்கே சொல்லிட்டாரு...திடீரென வைரலாகும் பில்லா பாடல் முதல்வர் இப்ப சொல்றார்... அஜித் அன்னிக்கே சொல்லிட்டாரு...திடீரென வைரலாகும் பில்லா பாடல்

    தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கொலஞ்சி என்ற படத்தையும் தயாரித்துள்ளார் நவீன் முகமதலி. தற்போது அக்னி சிறகுகள் மற்றும் அலாவுதினின் அற்புத கேமரா ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

    இயக்குநர் நவீன் முகமதலி டிவீட்ஸ்

    இயக்குநர் நவீன் முகமதலி டிவீட்ஸ்

    அலாவுதினின் அற்புத கேமரா படத்தை தயாரித்து இயக்கும் நவீன் முகமதலி அந்தப் படத்தில் நடித்தும் வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள இயக்குநர் நவீன் முகமதலி அவ்வப்போது சினிமா மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

    ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்தது

    ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்தது

    அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபன்கள் குறித்து டிவீட்டியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை எந்த சண்டையுமின்றி கைப்பற்றியதால் கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது.

    பெண்கள் மீதான அடக்குமுறை

    பெண்கள் மீதான அடக்குமுறை

    அதிபர் மாளிகையை கைப்பற்றிய பின்னர், போர் முடிந்துவிட்டதாக தாலிபன்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பெண் உரிமைகள் குறித்து பேசிய தாலிபன்கள் இன்னமும் பெண்கள் மீதான அடக்குமுறையை ஏவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

    புர்கா அணியாத பெண்ணை கொன்ற தாலிபன்கள்

    புர்கா அணியாத பெண்ணை கொன்ற தாலிபன்கள்

    இந்நிலையில் இயக்குநர் நவீன் முகமதலி நியூ யார்க் போஸ்ட்டில் வெளியான செய்தி ஒன்றை மேற்கோள் ஷேர் செய்துள்ளார். அதில, பெண் உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறிய அன்றே புர்கா அணியாத பெண்ணை தாலிபன்கள் கொன்றுவிட்டதாக செய்தி இடம் பெற்றுள்ளது

     மத அடிப்படைவாதிகள் இணையும் புள்ளி

    மத அடிப்படைவாதிகள் இணையும் புள்ளி

    அந்த செய்தியை ஷேர் செய்துள்ள நவீன் முகமதலி, மத அடிப்படைவாதிகள் ஒன்றுபோலவே சிந்திப்பது வியப்பன்று. எல்லா மத அடிப்படைவாதிகளும் கருத்து வேறுபாடின்றி இணையும் ஒரு புள்ளி பெண்ணடிமைத்தனம். இதை நாம சொன்னா இவனுங்களும் திட்டுவானுங்க அவனுங்களும் திட்டுவானுங்க. கொடும என்னனா அந்த பெண்களே நம்மல திட்டுவாங்க.. என்று பதிவிட்டுள்ளார்.

    அதைவிட கொடூரம் வேறில்லை!

    அதைவிட கொடூரம் வேறில்லை!

    மற்றொரு பதிவில் நான் நடுநிலைவாதி அல்ல. ஒரு பக்கம் நிற்பவன். அது சமத்துவத்தின் பக்கம். ஆதிக்கத்திற்கு எதிரான பக்கம். ஆண் துணையின்றி பெண் வெளியே நடக்க கூடாது என்று தாலிபான் சொல்கிறது. இது கொடூரம் இல்லை என்று தாங்கள் சொன்னால் அதைவிட கொடூரம் வேறில்லை! என குறிப்பிட்டுள்ளார்.

    ஆண்கள் தீர்மானிக்க கூடாது

    ஆண்கள் தீர்மானிக்க கூடாது

    இதேபோல் தாலிபன்களுக்கு எதிராக பெண்கள் போராடும் வீடியோவை ஷேர் செய்துள்ள நவீன் முகமதலி, தாலிபானை எதிர்த்து போராடும் இந்த பெண்களின் துணிவு, உலகத்திலுள்ள அனைத்து பர்தாவிற்குள் பூட்டப்பட்ட இஸ்லாமிய பெண்களுக்கும் வர வேண்டும். பெண் என்ன உடுத்த வேண்டும், பேச வேண்டும் என்பது அந்த பெண்ணின் உரிமை. அதை ஆண்கள் தீர்மானிக்க கூடாது.. என பதிவிட்டுள்ளார்.

    மாற்று தாலிபான் ஆதிக்கம் அல்ல

    மாற்று தாலிபான் ஆதிக்கம் அல்ல

    அமெரிக்க ஆதிக்கத்திற்கு மாற்று தாலிபான் ஆதிக்கம் அல்ல. மதம், வழிபாடு, வாழ்க்கைமுறை, கருத்து இவை யாவும் தனி மனித சுதந்திரங்கள். இவைகளை கட்டுப்படுத்தும் எவையும் சர்வாதிகாரமே. தாலிபான் ஒரு மத அடிப்படைவாத சர்வாதிகாரமே. அரசியலில் மதம் கலக்கும்போது ஒடுக்குமுறையே ஓங்கி நிற்கும் என்றும் நவீன் முகமதலி பதிவட்டுள்ளார்.

    தாலிபானை எப்படி உங்களால் ஆதரிக்க முடிகிறதோ?!

    தாலிபானை எப்படி உங்களால் ஆதரிக்க முடிகிறதோ?!

    மற்றொரு பதிவில் அடிதட்டு மக்களின் உரிமைக்காக போராடும் ஒரு இயக்கத்தில் இருந்துகொண்டு, ஆஃப்கான் மக்களின் அடிப்படை உரிமைகளை மதத்தீவிரவாதத்தின் பெயரால் உயிரை பறிக்கும் தாலிபானை எப்படி உங்களால் ஆதரிக்க முடிகிறதோ?! மத அடிப்படைவாதம் எந்த நாட்டிற்கும் சரியானதன்று என்றும் இயக்குநர் நவீன் முகமதலி தெரிவித்துள்ளார்.

    English summary
    Director Naveen Mohamedali has tweeted about Talibans. Talibans controled Afghanistan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X