twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆடைகள் தயாரிப்பில் நடக்கும் மோசடி குறித்து இயக்குநர் பி.எஸ் மித்ரன்...என்ன தகவல் தெரியுமா ?

    |

    சென்னை: சர்தார் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை சமீபத்தில் அறிவித்திருந்தனர் படக் குழுவினர்.

    நைல் நதி கரையோரத்தில் எதை பயிரிட்டாலும் உடனே முளைத்து விடும். அதேபோல தண்ணீர் பிரச்சனையை எடுத்தபோது நிறைய தகவல்கள் கிடைத்தது. ஆனால் படத்தின் நீளத்திற்காக குறைவாகவே கதையில் சொன்னார்களாம்.

    இந்நிலையில் சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார் மித்ரன்.

    ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷாலை சந்தித்த லோகேஷ் கனகராஜ்.. தளபதி 67ல் இணைகிறாரா?ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷாலை சந்தித்த லோகேஷ் கனகராஜ்.. தளபதி 67ல் இணைகிறாரா?

    பாட்டில் குவியல்

    பாட்டில் குவியல்

    இரும்புத்திரை டப்பிங் பணிகள் நடைபெற்றது கொண்டிருந்தபோது தனக்கு சிறிய பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் கொடுப்பார்கள். ஒரு முறை அந்தக் கட்டிடத்தின் கீழே நின்று கொண்டிருந்தபோது ஒரு பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் குவிந்து கிடந்தன. நான் அவர்களிடம் இதனை சுத்தம் செய்ய மாட்டீர்களா என்று கேட்டதற்கு தினமும் சுத்தம் செய்வோம், இது இன்றைக்கு மட்டும் நிரம்பியுள்ள பாட்டில்கள் என்று கூறினார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எப்போது பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த ஆரம்பித்தோம் என்று ஆராய்ந்த போதுதான் பல தகவல்கள் கிடைத்தன என்று மித்திரன் கூறியிருக்கிறார்.

    ஆராய்ச்சிகள்

    ஆராய்ச்சிகள்

    தண்ணீர் பிரச்சனை இந்த படத்தின் மையக்கருவாக இருப்பதால் அதைப்பற்றி மற்றும் ஆராய்ச்சி செய்யவில்லை. அதைத் தாண்டி பிளாஸ்டிக் பாட்டில்கள், எண்பதுகளில் இருந்த நாடக நடிகர்கள், அவர்கள் எப்படிப்பட்ட பாடல்கள் பாடி நடித்துக் கொண்டிருந்தார்கள், உளவாளிகள் எப்படி வேலை செய்வார்கள் என்று பல விதத்தில் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது. சில உளவாளிகளுடன் நான் பயணம் செய்தேன், அவர்கள் எப்படி உளவு பார்க்கிறார்கள் என்று உடன் இருந்து தெரிந்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

    பட்டா ஏமாற்று வேலை

    பட்டா ஏமாற்று வேலை

    இரும்புத்திரையில் ஒரு பிரச்சனை,, சர்தார் திரைப்படத்தில் ஒரு பிரச்சனை,இதேபோல வேறு ஏதாவது பிரச்சனை பற்றி அறிந்துள்ளீர்களா என்ற கேள்விக்கு, நில மோசடி இங்கு பல நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஒரே இடத்திற்கு இரண்டு பட்டாக்கள் வாங்கி ஒன்றை வங்கியில் காண்பித்து 50 கோடி கடன் வாங்கி கொள்வார்கள், பின்னர் இன்னொன்றை வைத்து வேறு நபருக்கு விற்றுவிட்டு இவர்கள் எஸ்கேப் ஆகி விடுவார்கள். இப்படி 2 பட்டாக்கள் இருப்பதினால் வங்கிகளுக்கும் அந்த நிலத்தை வாங்கியவர்களுக்கும் பிரச்சனை ஏற்படும் என்று கூறியிருக்கிறார்

    உள்ளாடை கம்பெனி

    உள்ளாடை கம்பெனி

    மேலும், விக்டோரியா சீக்ரெட் என்கிற வெளிநாட்டு உள்ளாடை கம்பெனியில் தயாரிக்கப்படும் பெண்களின் உள்ளாடைகள் ஆந்திராவில்தான் தயாரிக்கப்படுகின்றன. நூல் உற்பத்தியிலிருந்து இறுதியாக தயாரான அந்த உள்ளாடை கவரில் அடைக்கப்பட்டு விலை மதிப்பு ஒட்டப்பட்டு விற்பனைக்கு தயாராகும் வரை அந்தப் பணி இங்குதான் நடக்கிறது. முழுக்க முழுக்க வெளிநாட்டவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகளை தயாரிக்கும் கம்பெனி இங்கு இருப்பது எதற்காக தெரியுமா? ஒரு பிராவை மட்டும் உருவாக்குவதற்கு கிட்டத்தட்ட 10000 முதல் 15000 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. அந்த தண்ணீருக்காகத்தான் இங்கு செயல்படுகிறது என இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பகிரங்கமான தகவல் ஒன்றை கூறியிருக்கிறார்.

    English summary
    After the massive success of Sardar, the makers of the film had recently announced the Sardar Part-2. Anything planted on the banks of the Nile will sprout immediately. Similarly, when we took up the water problem, we got a lot of information. But for the length of the film, only less information was told in the story.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X