பா.ரஞ்சித் 10 ஆண்டு திரைப்பயணம்..வித்தியாசமான போஸ்டருடன் வாழ்த்து சொன்ன சந்தோஷ் நாராயணன்!

சென்னை : சினிமாவில்10 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குநர் பா ரஞ்சித்திற்கு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை 28 திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய பா. ரஞ்சித், அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில், அட்டக்கத்தி தினேஷ், நந்திதா தாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், கலையரசன் ஆகியோர் நடித்திருந்தனர்.

முதல் திரைப்படத்திலேயே வித்தியாசமான காதல் ஜாலியான கதையைக் கொடுத்து, கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென தனிஇடத்தை பிடித்தார் பா.ரஞ்சித்.

இயக்குநர் பா.ரஞ்சித்

இயக்குநர் பா.ரஞ்சித்

அட்டக்கத்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார். கார்த்தி,காத்ரீனா தெரேசா,கலையரசன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் மையக்கருவே சுவர். சுவரை வைத்து நடக்கும் அரசியல் சண்டை குறித்து இப்பட்டமாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த, ரசிகர்கள் நன்மதிப்பை பெற்றது.

சமூக அக்கறை கொண்ட கதைகள்

சமூக அக்கறை கொண்ட கதைகள்

சினிமாவுக்கு வந்து இருபடங்களை இயக்கிய உடனே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து இரு திரைப்படங்களை இயக்கினார். இந்த இருதிரைப்படங்களும் கலவையான விமர்சனத்தை பெற்றன். சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட பா. ரஞ்சித் சமூக கருத்துடைய படங்களை இயக்குவதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார்.

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை

பா ரஞ்சித் கடைசியாக, சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார். இதில். ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் விஜய் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திலும், பா.ரஞ்சித் தன்னுடைய வழக்கமான அரசியலை துணிச்சலாக பேசி இருப்பார். 1970ம் ஆண்டு சென்னையில் நடந்த பாக்ஸிங்கை கண்முன் கொண்டு வந்து இருந்தார். குறிப்பாக திமுக அதிமுக, எமர்ஜென்சி காலக்கட்டம் பற்றி பல வசனங்கள் இப்படத்தில் இடம் பெற்றன.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்

இயக்குநராக இருந்த பா ரஞ்சித், பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். இப்படம், வசூலைக் குவித்ததோடு பாராட்டுக்களையும் பெற்றது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேதுராமன் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். மேலும், பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் ‘ஜெ. பேபி' திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

10 ஆண்டு திரைப்பயணம்

10 ஆண்டு திரைப்பயணம்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏதோ ஒரு வழியில் ஒரு உந்து சக்தியாக விளங்கும் இயக்குனர் பா.ரஞ்சித் திரைத்துறையில் பத்து ஆண்டுகளை கடந்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக மாறினார். கோலிவுட்டில் ஏராளமான இயக்குநர்கள் இருந்தாலும் இவருக்கு என்று தனி ஸ்டைலை வைத்துக்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

Recommended Video

PA Ranjith Speech | 'இவங்களுக்கு ஜாதியே தெரியாது! பாவம்!' | Oneindia Tamil
வித்தியாசமான போஸ்டர்

வித்தியாசமான போஸ்டர்

இந்நிலையில்,இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில், சினிமாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த பா.ரஞ்சித்திற்கு வித்தியாசமான வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தம்பி பா.ரஞ்சித் 10 ஆண்டுகள் என குறிப்பிட்டு, வித்தியாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, பலரும் பா ரஞ்சித்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X