அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களை தயாரிப்பாளர்களிடம் பேச பயமாக இருந்தது.. பா ரஞ்சித் பளீச்!

சென்னை : இயக்குநர் பா ரஞ்சித் தமிழ் சினிமாவை வேறு கோணத்தில் ரசிகர்களிடையே கொண்டு சென்று வருபவர்.

Recommended Video

Independent படம் எடுக்கிறது எனக்கு ஒரு கனவு மாதிரி | Pa Ranjith | Sethumaan Press Meet #kollywood

அடுத்ததாக விக்ரமுடன் இணைந்து இவர் படமியக்கவுள்ளார். இந்நிலையில் இவரது நட்சத்திரம் நகர்கிறது படமும் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் இநதப் படத்தின் பிரமோஷன்களுக்காக தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகிறார்.

இயக்குநர் பா ரஞ்சித்

இயக்குநர் பா ரஞ்சித்

இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சார்பட்டா பரம்பரை படம் வெளியானது. இந்தப் படம் சுதந்தரத்திற்கு முன்பு வடசென்னையில் இருந்த குத்துச்சண்டை பரம்பரைகள் குறித்த கதைக்களத்தை மையமாக கொண்டு பீரியட் படமாக வெளியானது.

வாய்ப்புகள் மறுக்கப்பட்ட உதவி இயக்குநர்கள்

வாய்ப்புகள் மறுக்கப்பட்ட உதவி இயக்குநர்கள்

இத்தகைய ஒரு கதைக்களத்தை ரசிகர்களிடம் சரியாக கொண்டு சேர்த்த பெருமையை தட்டிச் சென்றார் பா ரஞ்சித். படத்தில் தலித் அரசியலையும் அவர் இழையோட விட்டிருந்தார். தன்னுடைய உதவி இயக்குநர்கள் என்பதாலேயே பலருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக அந்தப் படத்தின் பிரமோஷனின்போதும் வெளிப்படுத்தினார்.

விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணி

விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணி

அடுத்ததாக விக்ரமுடன் இணைந்து புதிய படத்தை இயக்கவுள்ளார் பா ரஞ்சித். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்ட நிலையில் விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. தற்போது கோப்ரா படத்தின் பிரமோஷன்களில் விக்ரமும் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் பிரமோஷன்களில் பா ரஞ்சித்தும் பிசியாக உள்ளனர்.

கேஜிஎப்பை மையமாக கொண்ட கதை

கேஜிஎப்பை மையமாக கொண்ட கதை

பா ரஞ்சித் -விக்ரம் கூட்டணியில் உருவாகவுள்ள படம் 3டியில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு பீரியட் படமாக உருவாகவுள்ளதாக முன்னதாக பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதனிடையே விரைவில் ரிலீசாகும் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் பிரமோஷனுக்காக தற்போது ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் கேரளா சென்றுள்ளனர்.

பா ரஞ்சித் பேட்டி

பா ரஞ்சித் பேட்டி

இந்தப்படத்தையொட்டி பிரமோஷனுக்காக பல பேட்டிகளை பா ரஞ்சித் அளித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2012ல் இருந்த பா ரஞ்சித் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஞ்சித், அந்த ரஞ்சித்திடம் பல தயக்கங்கள் இருந்ததாகவும் அட்டக்கத்தி, மெட்ராஸ் போன்ற படங்களை ரசிகர்களிடம் சரியாக கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பா ரஞ்சித் தயக்கம்

பா ரஞ்சித் தயக்கம்

மேலும் அத்தகைய கதைகளை தயாரிப்பாளர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் அதிகமான தயக்கம் இருந்ததாகவும், ஒரு கட்டத்தில் பாதி நிறைவடைந்த நிலையில், அட்டக்கத்தி படம் வேலைக்கு ஆகாது, வெற்றி பெறாது என்று மற்றவர்கள் கூறியதைக் கேட்ட தயாரிப்பாளரும் அதை நம்பிவிட்டதாகவும் தொடர்ந்து அந்தப் படத்தில் ஆர்வம் காட்டாமல் விலகியதாகவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சந்தேகம்

தயாரிப்பாளர் சந்தேகம்

இதையடுத்து ஸ்பெஷல் ஸ்கிரீனிங் மூலம் படத்தை வெளியிட்டு, அதையடுத்தே படம் வெளியானது என்றும் தெரிவித்தார். இந்தப் படத்தின் தலித் அரசியலும் படத்தின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் படத்தின் கதாநாயகன் உள்ளிட்ட அனைத்தும் மாறுப்பட்ட கோணத்தில் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்பாலினத்தின்மீதான ஈர்ப்பு

எதிர்பாலினத்தின்மீதான ஈர்ப்பு

தொடர்ந்து தனது நட்சத்திரம் நகர்கிறது படத்தின் கதைக்களம் குறித்தும் அவர் அதிகமான கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார். தன்னுடைய எதிரில் இருக்கும் நபர்மீது ஏற்படும் ஈர்ப்பு தொடர்ந்து அவரிடம் தன்னை ஒப்படைக்கும் வகையிலான அடுததடுத்த பிராசஸ், நம்பிக்கையே காதலாக அமைகிறது என்றும் அதை குறிப்பிடும்வகையில் நட்சத்திரம் நகர்கிறது படம் அனைவரையும் கவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X