அடுத்த பிளாக்பஸ்டர் ரெடி.. விஜய்யை வைத்து சூப்பர் ஹீரோ படம்.. பா. ரஞ்சித்தின் அதிரடி பிளான்!

சென்னை: விஜய்யை வைத்து சூப்பர் ஹீரோ படம் ஒன்றை இயக்க உள்ளதாக இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் பா ரஞ்சித். அடுத்ததாக நடிகர் கார்த்திக்கை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார்.

வட சென்னையில் ஒரு சுவரை வைத்து நடக்கும் அரசியலை மைய்யப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சார்பட்டா பரம்பரை படம்

சார்பட்டா பரம்பரை படம்

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய ஹிட்டை கொடுக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை.

சார்பட்டா பரம்பரை நடிகர்கள்

சார்பட்டா பரம்பரை நடிகர்கள்

இந்தப் படம் கடந்த மாதம் அமேஸான் பிரைம்மில் ஓடிடி தளத்தில் கடந்த மாதம் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இந்தப் படத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், ஜான் கோக்கென், ஷபீர் கல்லரக்கல், அனுபமா குமார், ஜிஎம் சுந்தர், சந்தோஷ் பிரதாப், வேட்டை முத்துக்குமார், காளி வெங்கட், கிஷோர், சரவணவேல் என பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

நல்ல வரவேற்பு பாராட்டு

நல்ல வரவேற்பு பாராட்டு

1970களில் வட சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சார்பட்டா பரம்பரை படத்தில் சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரைக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டியை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

Recommended Video

Sarpatta shootingல Ranjith இப்படி தான் இருப்பாரு | Vembhuli, Vetri, Raman
நடிகர் விக்ரம் ?

நடிகர் விக்ரம் ?

தற்போது இயக்குநர் பா ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷாரா விஜயன் ஆகியோர் லீடிங் ரோலில் நடிக்கின்றனர். அடுத்ததாக இயக்குநர் பா ரஞ்சித் நடிகர் விக்ரமை வைத்து இயக்கப்போவதாக தகவல் பரவியது.

சூப்பர் ஹீரோ படம்

சூப்பர் ஹீரோ படம்

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பா ரஞ்சித், நடிகர் விஜய்யை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ படத்தை இயக்கப்போவதாக கூறியுள்ளார். சூப்பர் ஹீரோ என்றால் கற்பனையான விஷயங்கள் மட்டும் இல்லை. கற்பனைக்கும் நிஜத்துக்கும் உள்ள தொடர்பினை வைத்து ஒரு கதை தயார் செய்திருப்பதாக கூறியுள்ளார் பா ரஞ்சித்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X