ஒரிஜினல் KGF-ஐ இனி தான் பார்க்கப் போகிறோம்.. சியான் 61 கதையை ஓப்பனாக சொன்ன பா. ரஞ்சித்!

சென்னை: சியான் 61 படத்தின் பூஜை இன்று சென்னையில் கோலாகலமாக போடப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பா. ரஞ்சித் இந்த படத்தின் கதை கேஜிஎஃப்பின் கதை என அவர் ஓப்பன் பண்ணி உள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

கன்னட திரையுலகில் சமீபத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் முதல் மற்றும் கேஜிஎஃப் 2 திரைப்படஙக்ள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.

இந்நிலையில், கேஜிஎஃப் கதையை மையப்படுத்தி இயக்குநர் பா. ரஞ்சித் - சியான் விக்ரம் படமும் உருவாக போகிறது குறிப்பிடத்தக்கது.

சியான் 61 பூஜை

சியான் 61 பூஜை

சியான் விக்ரமின் 61வது படத்தின் பூஜை இன்று சென்னையில் பிரம்மாண்டமான முறையில் போடப்பட்டது. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். 19ம் நூற்றாண்டு பீரியட் படமாக இந்த படம் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பீரியட் படங்களை இயக்கும் பா ரஞ்சித்

பீரியட் படங்களை இயக்கும் பா ரஞ்சித்

சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து பீரியட் படங்களை இயக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார் இயக்குநர் பா. ரஞ்சித். பிர்ஸா முண்டா வாழ்க்கை வரலாறு படத்தை பாலிவுட்டில் இயக்கப் போவதாக தெரிவித்த பா. ரஞ்சித் அதற்கு முன்னதாக நட்சத்திரம் நகர்கிறது மற்றும் சியான் விக்ரமின் 61வது படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ரியல் கேஜிஎஃப்

ரியல் கேஜிஎஃப்

சியான் 61 படத்தின் பட பூஜை விழா முடிந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பா. ரஞ்சித் 19ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலத்தில் கோலார் தங்க சுரங்கத்தில் நடந்த உண்மையான சம்பவங்களை எடுத்துச் சொல்லும் படமாக இந்த படம் இருக்கும் என பா. ரஞ்சித் கூறியுள்ளார். அப்போ இதுதான் ரியல் கேஜிஎஃப் கதையா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Recommended Video

Pudhupettai 2 எப்போ வரும்? KGF,RRR-ஐ மிஞ்சும் Vikram *Kollywood | Filmibeat Tamil
விக்ரம் மிரட்டப் போறாரு

விக்ரம் மிரட்டப் போறாரு

கேஜிஎஃப் படத்தில் நடிகர் யஷ் மிரட்டியதோடு பல மடங்கு இந்த படத்தில் நடிகர் விக்ரம் மிரட்டப் போவது கன்ஃபார்ம் என சியான் ரசிகர்கள் சோஷியல் மீடியாவை அதிர வைத்து வருகின்றனர். ஹீரோயின், வில்லன் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குநர் பா. ரஞ்சித் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X