twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா லாக்டவுனால் அதிரடியாக மாறிய வாழ்க்கை.. சொந்த ஊரில் விவசாயம் செய்யும் பிரபல இயக்குனர்!

    By
    |

    சென்னை: லாக்டவுனுக்கான நேரத்தை விவசாயம் செய்ய பயன்படுத்துக்கொண்டதாக இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

    கொரோனா தொற்று உலகம் முழுவதும் மக்களை மிரட்டி வருகிறது. இந்தத் தொற்று வேகமாகப் பரவி வருவதால், இதைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

    இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது பரவாமல் தடுக்க லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டும் இந்த தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

    டீசர், போஸ்டரை கண்ட இயக்குனர் அதிர்ச்சி.. பிரபல ஹீரோவின் 250 வது படத்துக்கு கோர்ட் இடைக்கால தடை! டீசர், போஸ்டரை கண்ட இயக்குனர் அதிர்ச்சி.. பிரபல ஹீரோவின் 250 வது படத்துக்கு கோர்ட் இடைக்கால தடை!

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    இந்தியாவில், இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19,693 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,433 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 2,53,287 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காய்கறிகள், பழங்கள்

    காய்கறிகள், பழங்கள்

    இந்த கொரோனா காரணமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள லாக்டவுனால் பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். மற்றத் துறைகளை போல சினிமா துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சில நடிகர்கள், காய்கறிகள், பழங்கள் விற்று தங்கள் கஷ்டத்தைப் போக்கி வருகின்றனர். மராத்தி நடிகர் ஒருவர் கருவாடு விற்று வருகிறார். கேரள நடிகர் ஒருவர் மீன் கடை போட்டுள்ளார்.

    இயக்குனர் பாண்டிராஜ்

    இயக்குனர் பாண்டிராஜ்

    சிலர் இந்த லாக்டவுனை பயன்படுத்தி விவசாயத்துக்குத் திரும்பி உள்ளனர். நடிகர் பிரகாஷ் ராஜ் தனது பண்ணை வீட்டில்தான் இந்த லாக்டவுன் காலத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜூம், விவசாயத்துக்குத் திரும்பி இருக்கிறார். அவர் தனது சொந்த ஊரில் விவசாயம் செய்துவருவதாகத் தெரிவித்துள்ளார்.

    செய்ய முடியாது

    செய்ய முடியாது

    அவர் கூறும்போது, 'லாக்டவுனுக்கு முன்பே எனது சொந்த ஊரான விராச்சிலைக்கு வந்துவிட்டேன். எனது அப்பாவால் விவசாயம் செய்ய முடியாது என்று கைவிடப்பட்ட நிலத்தில் கிணறு வெட்டி விவசாயப் பணிகளை செய்துவருகிறேன். என் மனைவி, மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் காலையிலேயே நிலத்துக்குச் சென்று விடுகிறோம்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    வெண்டைக்காய், கொத்தவரங்காய் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ளோம். மா, தென்னை செடிகள் நட்டுள்ளோம். சொந்த நிலத்தில் விவசாயம் செய்து மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வேலைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலையிலும் ஈடுபட்டு வருகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Director Pandiraj becomes farmer, He is farming in his village
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X