சர்தார் பட இயக்குநர் பி.எஸ். மித்ரனுக்கு நிச்சயதார்த்தம்.. மாலையும் கழுத்துமாக மாஸ் காட்ராப்ல!
சென்னை: இரும்புத்திரை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பி.எஸ். மித்ரனுக்கு நிச்சயம் ஆகி விட்டது.
விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ படங்களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன்.
கார்த்தி நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள சர்தார் படத்தை இயக்கி உள்ள பி.எஸ். மித்ரன் அஷமீரா ஐயப்பன் என்பவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.

இரும்புத்திரை இயக்குநர்
இயக்குநர் பி.எஸ். மித்ரன் என்பதை விட இரும்புத்திரை இயக்குநர் என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த பி.எஸ். மித்ரன் விரைவில் சர்தார் பட இயக்குநராக அப்கிரேட் ஆக உள்ளார். விஷால், சமந்தா மற்றும் அர்ஜுன் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான இரும்புத்திரை படத்தில் ஸ்மார்ட் போன் மற்றும் டெக்னாலஜியை பயன்படுத்தி எப்படியெல்லாம் ஆன்லைன் மோசடியை ஒரு பெரிய டார்க் நெட்வொர்க் பயன்படுத்தி வருகிறது என்பதை காட்டி பலரையும் கதிகலங்க வைத்தார்.

சூப்பர் ஹீரோ
2019ம் ஆண்டு வெளியான ஹீரோ படம் மூலம் சிவகார்த்திகேயனை பேட்மேன் ரேஞ்சுக்கு ஒரு சூப்பர் ஹீரோவாக மாற்றி இருந்தார். அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் அறிமுகமானார். இரும்புத்திரை படத்தைத் தொடர்ந்து மீண்டும் அர்ஜுனை இந்த படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார். அறிவு திருட்டு எனும் கான்செப்ட்டை எடுத்த விதத்தில் பாராட்டுக்களை பெற்றாலும், இரும்புத்திரை அளவுக்கு படம் ஹிட் அடிக்கவில்லை.

சர்தார் தீபாவளி
ஏகே61 படம் இந்த தீபாவளிக்கு வரும் என அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், தீபாவளிக்கு யாரு வந்தாலும் சரி நாங்க வரோம் என கார்த்தியின் சர்தார் படம் தீபாவளி ரிலீஸ் என தில்லாக அறிவித்தார் மித்ரன். சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் சர்தார் உடன் மோத தயாராகி உள்ள நிலையில், வேறு சில படங்கள் போட்டிக்கு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மித்ரனுக்கு நிச்சயமாகிடுச்சு
எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் திடீரென செம சைலன்ட்டாக சர்தார் பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் தனது நிச்சயதார்த்தத்தை ரொம்பவே சிம்பிளாக முடித்திருக்கிறார். சினிமா துறையில் பத்திரிகையாளராக இருக்கும் அஷமீரா ஐயப்பன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நிறைவடைந்த நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

ஆடை இயக்குநர் வாழ்த்து
மேயாதமான், ஆடை மற்றும் சந்தானத்தின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள குலு குலு படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் மாலையும் கழுத்துமாக இயக்குநர் பி.எஸ். மித்ரன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் ரத்னகுமார் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











