»   »  போலீஸ் கமிஷனருடன் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் சந்திப்பு!

போலீஸ் கமிஷனருடன் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் சந்திப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல இயக்குநர் ஆர் சுந்தரராஜன் நேற்று திடீரென போலீஸ் கமிஷனரைச் சந்தித்துப் பேசினார். இதற்கான காரணத்தை போலீசார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.

பிரபல சினிமா இயக்குனரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் மீது ஏற்கெனவே ஒரு மோசடிப் புகார் கமிஷனர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது.

Director R Sundarrajan meets Chennai commissioner

இந்த நிலையில்தான் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார் ஆர் சுந்தர்ராஜன். அவர் போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து பேசினார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது தனிப்பட்ட பிரச்சினை தொடர்பாக கமிஷனரை சந்தித்து பேசியதாகக் கூறினார்.

சுந்தர்ராஜன் ஏற்கனவே கொடுத்த புகார் மனு ஒன்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில், நிலுவையில் இருப்பதாகவும் அந்த புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கமிஷனரிடம் மீண்டும் ஒரு மனு கொடுக்க அவர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

English summary
Veteran Film Maker and actor R Sundararajan has met Chennai Police commissioner yesterday and the reason was unknown.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil