twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படம் தோல்வி அடைந்தால் நானே பொறுப்பேற்கிறேன்...என்ன டைரக்டர் இப்படி சொல்லிட்டாரு?

    |

    சென்னை : விஜய் ஆண்டனி நடிப்பில் த்ரில்லர், டிடெக்டிவ் படமாக கொலை படம் உருவாக்கப்பட்டுள்ளது. விடியும் முன் படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ள படம்.இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

    Directors shocking statement on Kolai movie press meet

    கொலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், சமீபத்தில் கேரக்டர்கள் அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் கையில் சிகரெட்டுடன் அமர்ந்திருக்கும் ராதிகாவின் போஸ்டர் பயங்கர பரபரப்பை கிளப்பியது.

    கொலை படத்தில் விஜய் ஆண்டனி, டிடெக்டிவ் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.இந்த படம் ஹாலிவுட் த்ரில்லர் படமான 'Knives Out' பட வரிசையில் இடம்பிடிக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    இனம், மொழி வேறுபாடு இல்லாம எல்லார் வீட்லயும் கொடி: திடீர்ன்னு வீடியோ வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த் இனம், மொழி வேறுபாடு இல்லாம எல்லார் வீட்லயும் கொடி: திடீர்ன்னு வீடியோ வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்

    இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகைகள் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, இயக்குநர் பாலாஜி குமார் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர். அதேபோல் இயக்குநர்கள் மிஷ்கின், மிலிந்த் ராவ், சி.எஸ். அமுதன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

    இதில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், ஒரு படத்திற்கு மொத்தமாக 1700 ஷாட்டில் இருந்து 1800 ஷாட்டுகள் வரை மட்டுமே தேவைப்படும். ஆனால் இந்த திரைப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிக்கான ஷாட் எண்ணிக்கை மட்டும் 1200 என கூறினார்.

    கொலை திரைப்படத்தின் கதை ஒரு கொலையை கண்டுபிடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.இறுதிவரை அந்த கொலையை யார் செய்தார்கள் என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கும் என படக் குழுவினர் தெரிவித்தனர்.கொலை திரைப்படத்தில் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும் எனவும் கூறினர்.

    அதேபோல் இந்த படத்தின் இயக்குநர் பாலாஜி குமார் பேசுகையில், விஜய் ஆண்டனி மூலம்தான் கொலை படம் சாத்தியமானது. அவர் இந்த திரைப்படத்தின் கதை மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார் என கூறினார். மேலும் இந்த திரைப்படம் வெற்றியடைந்தால் அதற்கான பாராட்டுக்கள் அனைத்தையும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கொடுப்பதாகவும்,ஒருவேளை படம் தோல்வி அடைந்தால் அதற்கான முழு பொறுப்பையும் தான் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

    அதேபோல் ரித்திகா சிங் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் இந்த திரைப்படத்தின் கதை மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சி என தெரிவித்தனர். இறுதியாக பேசிய விஜய் ஆண்டனி கொலை திரைப்படம் நல்ல படமாக இருக்கும் என்று நம்புவதாகவும்,தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்ததாகவும் பாராட்டினார்.

    கொலை படத்தை செப்டம்பர் 22 ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இது உலகத் தரத்திலான த்ரில்லர் படம் என படக்குழுவினர் அடித்து சொல்வதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    English summary
    Kolai movie director Balaji Kumar met Press and said that If this movie will get success, all credits goes to technical workers. Suppose if the movie get failure, he will take all response for that. Director's this statement makes everyone as shocking.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X