twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாநாடு படக்குழுவினரிடம் திடீரென மன்னிப்பு கோரிய செல்வராகவன்.. என்ன மேட்டருன்னு பாருங்க?

    |

    சென்னை: சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆகும் நிலையில், இயக்குநர் செல்வராகவன் மாநாடு படக்குழுவினரிடம் மன்னிப்பு கோரியுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் கடந்த நவம்பர் 28ம் தேதி வெளியான படம் மாநாடு.

    சமீபத்தில் சோனி லைவ் ஒடிடி தளத்தில் மாநாடு திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    மாநாடு சக்சஸ் மீட்டிற்கு வராதது ஏன்... மெளனம் கலைவாரா சிம்பு ? மாநாடு சக்சஸ் மீட்டிற்கு வராதது ஏன்... மெளனம் கலைவாரா சிம்பு ?

    பிளாக்பஸ்டர் ஹிட்

    பிளாக்பஸ்டர் ஹிட்

    நடிகர் சிம்புவின் கரியரிலேயே மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக மாநாடு படம் மாறி உள்ளது. 100 கோடி கிளப்பில் மாநாடு படம் இணைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், தயாரிப்பு தரப்பு அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட விரும்பவில்லை என்றே தெரிகிறது.

    மீண்டும் சர்ச்சை

    மீண்டும் சர்ச்சை

    மாநாடு படம் ஆரம்பித்து பின்னர் அதில் சிம்பு நடிக்க மாட்டேன் என பின் வாங்கியதாகவும் அதனால் மாநாடு திரைப்படம் கிடப்பில் கிடந்த சர்ச்சைகளை எல்லாம் கடந்து அந்த படத்தில் சிறப்பாக நடித்து கொடுத்து படத்தை வெற்றிப் படமாக மாற்றிய பின்னர் மீண்டும் தயாரிப்பு தரப்புக்கும் நடிகர் தரப்புக்கும் இடையே சர்ச்சை வெடித்துள்ளது கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    சூப்பர் ஸ்டார் முதல்

    சூப்பர் ஸ்டார் முதல்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சூர்யா, இயக்குநர் ஷங்கர் என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் மாநாடு படத்தை பார்த்து விட்டு நடிகர் சிம்பு மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பை வெகுவாக பாராட்டி உள்ளனர். அதே போல தமிழில் டைம் லூப் கான்செப்ட்டில் அட்டகாசமான படத்தை உருவாக்கிய மாஸ்டர் மைண்ட் வெங்கட் பிரபுவையும் பாராட்டி வருகின்றனர்.

    மன்னிப்பு கேட்ட செல்வராகவன்

    மன்னிப்பு கேட்ட செல்வராகவன்

    இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் மாநாடு படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்டு போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. "தாமதமாய் மாநாடு பார்த்ததிற்கு மன்னிக்கவும். ரசித்து பார்த்தேன்" என நடிகர் சிலம்பரசன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் அருமை நண்பர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபுவை மனமார பாராட்டி உள்ளார்.

    விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி

    விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி

    மேலும், மாநாடு படம் இந்த அளவுக்கு வெற்றிபெற உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் சக நடிகர்களை பாராட்டும் விதமாக படக் குழுவினர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது விடாமுயற்சிக்கும் அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி என இயக்குநர் செல்வராகவன் ட்வீட் போட்டுள்ளார்.

    தியேட்டரில் பார்க்கவில்லையா?

    தியேட்டரில் பார்க்கவில்லையா?

    சிம்புவின் டைம் லூப் திரைப்படமான மாநாடு படத்தை தியேட்டரில் பார்க்கவில்லையா? சமீபத்தில் சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியான பின்னர் தான் பார்த்தீங்களா என இயக்குநர் செல்வராகவனிடம் ஏகப்பட்ட கேள்விகளை ரசிகர்கள் அடுக்கி வருகின்றனர்.

    கான் வருமா?

    கான் வருமா?

    மேலும், நடிகர் சிம்புவின் மாநாடு படத்தை இயக்குநர் செல்வராகவன் பாராட்டி உள்ள நிலையில், செல்வராகவன் - சிம்பு இயக்கத்தில் அறிவிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட கான் திரைப்படம் என்ன ஆனது? இதற்கு மேல் அந்த படம் வர வாய்ப்பு இருக்கா? என்கிற கேள்விகளையும் அடுக்கி வருகின்றனர்.

    English summary
    Director Selvaraghavan asks apologise to Maanaadu team for watching the film now only and praising the brilliant team effort.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X