twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    7ஜி ரெயின்போ காலனியும்.. நா.முத்துகுமாரின் வைர வரிகளும்.. 18 ஆண்டுகளை கடந்த படம்!

    |

    சென்னை : நடிகர் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் இணைந்து நடித்து கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி வெளியான படம் 7ஜி ரெயின்போ காலனி.

    இந்தப் படத்தில் இவர்கள் ஏற்று நடித்திருந்த கதிர் மற்றும் அனிதா கேரக்டர்கள் மற்றும் அவர்களது காதல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவையாகவே உள்ளன.

    இவர்களைச் சுற்றியே கதைக்களம் காணப்பட்டாலும் சிறிய சிறிய கேரக்டர்களும் இந்தப் படத்தில் மிகச்சிறந்த கவனத்தை பெற்றன.

    பாராட்டு மழையில் ராஜராஜ சோழன்.. அருள்மொழிவர்மனை கொண்டாடும் ஜெயம் ரவி ரசிகர்கள்!பாராட்டு மழையில் ராஜராஜ சோழன்.. அருள்மொழிவர்மனை கொண்டாடும் ஜெயம் ரவி ரசிகர்கள்!

    இயக்குநர் செல்வராகவன்

    இயக்குநர் செல்வராகவன்

    இயக்குர் செல்வராகவன் மனிதர்களின் உணர்ச்சிகளை மையமாக வைத்து கதைக்களங்களை உருவாக்கி அதன்மூலம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தவர். தன்னுடைய படங்கள் மூலம் நம் அக்கம் பக்கத்தில் அல்லது நமக்குள்ளேயே நாம் உணர்ந்துவரும் உணர்ச்சிகளை கொடுத்து ரசிகர்களை கட்டிப் போட்டு வருபவர்.

    7ஜி ரெயின்போ காலனி படம்

    7ஜி ரெயின்போ காலனி படம்


    இவரது ஆரம்ப கால படங்கள் மிகவும் சிறப்பானவை. குறிப்பாக தன்னுடைய தம்பி தனுஷை வைத்து படங்களை கொடுத்துவந்த செல்வராகவன், ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வாலை லீட் கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து 7ஜி ரெயின்போ காலனி
    என்ற உணர்ச்சிப் பூர்வமாமான கதையை கொடுத்தார்.

    புதுமையான அனுபவம்

    புதுமையான அனுபவம்

    கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி ரிலீசான இந்தப் படம் இப்போது பார்த்தாலும் புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இந்தப் படத்தில் கதிர் மற்றும் அனிதா என்ற கேரக்டர்களில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் வாழ்ந்திருந்தனர். இவர்களை சுற்றியே திரைக்கதை அமைந்திருந்தது.

    செம்மைப்படுத்திய காதல்

    செம்மைப்படுத்திய காதல்

    அந்த வகையில் இந்தப் படத்தை எந்தவிதமான தொய்வும் இல்லாமல் ரசிகர்களை தொடர்ந்து என்கேஜ் செய்திருந்தார் செல்வராகவன். இந்தப் படத்தில் காதல் எப்படி ஒரு மனிதனை செம்மைப்படுத்தும் என்பதை இயல்பாக கதையின் போக்கிலேயே சொல்லியிருப்பார் செல்வராகவன்.

    மிகச்சிறந்த படைப்பாளி

    மிகச்சிறந்த படைப்பாளி

    இந்த ஆரம்பகால படங்களே செல்வராகவனை மிகச்சிறந்த படைப்பாளியாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து அவர் ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களை கொடுத்திருந்தாலும் அந்தப் படங்களுக்கு அடித்தளமாக 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களே அமைந்தது.

    கதிர் -அனிதா கேரக்டர்கள்

    கதிர் -அனிதா கேரக்டர்கள்

    இந்தப் படத்தில் வேலையில்லாமல் சுற்றித்திரியும் கதிர், அவர்கள் காலனிக்கு புதிதாக குடிபுகும் அனிதாவை காதலிப்பதும், அவர் காதலை ஏற்காமல் இருப்பதும், ஒருகட்டத்தில் கதிரின் காதலை அனிதா ஏற்கும்போது அவள் விபத்தில் இறப்பதும், அவள் நினைவாகவே கதிர் வாழ்வதும் என காதலை அழுத்தமாக கொண்டு சென்றிருப்பார் செல்வராகவன்.

    இசையும் பாடல் வரிகளும்

    இசையும் பாடல் வரிகளும்

    இந்தப் படத்திற்கு இசையும் பாடல்களும் மிகச்சிறந்த பங்களிப்பை கொடுத்திருந்தன. யுவன் சங்கர் ராஜா இசைக்கு தன்னுடைய பாடல் வரிகளால் உயிரூட்டியிருந்தார் மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார். ஒவ்வொரு பாடலும் அதன் மெட்டுக்காக சிறப்பாக அமைந்ததா அல்லது பாடல்வரிகளால் சிறப்பு பெற்றதா என்பது இதுவரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

    18 ஆண்டுகளை கடந்த படம்

    18 ஆண்டுகளை கடந்த படம்

    இந்தப் படம் தெலுங்கிலும் 7ஜி பிருந்தாவன் காலனி என்ற பெயரில் ரிலீசாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தற்போது வெளியாகி 18 ஆண்டுகளை கடந்துள்ளது குறித்து ரசிகர்கள் படத்தை நினைவு கூர்ந்து வருகின்றனர். தற்போதும் இந்தப் படம் பார்ப்பவர்கள் மனதை பாரமாக்குவது குறித்தும் பகிர்ந்து வருகின்றனர்.

    English summary
    Director Selvaraghavan's 7G Rainbow colony movie crossed 18 years and the fans celebrates
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X