twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    29 வருட ஷங்கரிசம்...பிரம்மாண்ட இயக்குனரின் பிரம்மிக்க வைக்கும் திரைப்பயணம் ஓர் பார்வை

    |

    சென்னை : அர்ஜுன் நடித்த ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் டைரக்டர் ஷங்கர். முதல் படமே சூப்பர் ஹிட்டாகி, விருதுகளையும் பெற்றதால் கவனிக்கப்படும் டைரக்டரானா ஷங்கர்.

    டைரக்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட ஷங்கர்,தமிழ் சினிமாவை தாண்டிக இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றுள்ளார். வெறும் 14 படங்களை மட்டும் இயக்கி இருந்தாலும், இயக்கிய அத்தனை படங்களையும் ஹிட் ஆக்கியவர் ஷங்கர்.

    அடுத்து எப்போது படம் இயக்குவார் என ரசிகர்களை மட்டுமல்ல, சினிமா உலகையே ஏங்க வைக்கக் கூடியவர் ஷங்கர். இந்தியிலும் படம் இயக்கி வெற்றி பெற்றவர், தற்போது தெலுங்கிலும் படம் இயக்கி வருகிறார். 29 ஆண்டு கால சினிமா பயணத்தை நிறைவு செய்த ஷங்கரின் பயணம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    ஷங்கரை அறிமுகம் செய்தது இவர் தானா

    ஷங்கரை அறிமுகம் செய்தது இவர் தானா

    டைரக்டர் ஷங்கரை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் வேறு யாருமில்லை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் தான். ஷங்கர் மற்றும் அவரின் குழுவினர் இயற்றிய மேடை நாடகம் ஒன்றை யதார்த்தமாக கவனித்த எஸ்.ஏ.சந்திசேகரை சினிமாவில் நடிக்க வைக்கத் தான் எஸ்ஏசி அழைத்து வந்தார்.

    நடிகர் டூ டைரக்டர்

    நடிகர் டூ டைரக்டர்

    வசந்த ராகம் என்ற படத்தில் தான் ஷங்கர் முதல் முறையாக நடித்தார். பிறகு டைரக்ஷனை தேர்வு செய்த ஷங்கர், எஸ்ஏசி, பவித்ரன் ஆகியோரிடம் அசிஸ்டென்டாக சேர்ந்து பல படங்களில் பணியாற்றினார். 3 ஆண்டுகள் அசிஸ்டென்டாக பணியாற்றிய பிறகு, 1993 ல் ஜென்டில்மேன் படத்தை இயக்கி, டைரக்டராக வெற்றி பெற்றார்.

     தொட்டதெல்லாம் ஹிட்

    தொட்டதெல்லாம் ஹிட்

    அதைத் தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன் என வரிசையாக ஹிட் கொடுத்தார். தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல் ஷங்கர் படம் என்றாலே மாஸ் ஹிட், வசூல் சாதனை என்ற நிலை ஏற்பட்டது. டைரக்ஷனைத் தாண்டி முதல்வன், காதல், இம்சை அரசன் 23 ம் புலிக்கேசி, வெயில், கல்லூரி, அறை எண் 305 ல் கடவுள் உள்ளிட்ட பல படங்களை தயாரிக்கவும் செய்தார்.இதில் வெயில் படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது.

     ஷங்கரின் திரைப்பயணம்

    ஷங்கரின் திரைப்பயணம்

    எஸ்ஏசி.,யிடம் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய ஷங்கர், வித்தியாசமான கதைகளை உருவாக்கி, அவற்றை படமாக்குவதில் வெற்றி கண்டவர். கடைசியாக 2018 ம் ஆண்டு ரஜினி நடித்த 2.ஓ படத்தை இயக்கிய ஷங்கர், அதற்கு பிறகு இந்தியன் 2 படத்தை துவக்கி, அது இதுவரை முடிக்கப்படவில்லை.தற்போது ஆர்சி15, இந்தியன் 2 என இரு படங்களை கையில் வைத்துள்ளார் ஷங்கர்.

     ஷங்கரின் தனி ஸ்டைல்

    ஷங்கரின் தனி ஸ்டைல்

    ஒருநாள் முதல்வர், லஞ்சத்தை தட்டி கேட்கும் அந்நியன், அதை தனி ஸ்டைலில் சமாளிக்கும் சிவாஜி, இன்ஜியரிங்கை வித்தியாசமாக படிக்கவும், பிடித்த வாழ்க்கையை வாழ சொல்லும் நண்பன் என படத்திற்கு படம் வித்தியாசம், பிரம்மாண்டம், சோஷியல் மெசேஜ், ஆக்ஷன் என அத்தனையையும் கச்சிதமாக தனது படத்தில் தரக் கூடியது தான் ஷங்கரின் ஸ்பெஷாலிட்டி.

    English summary
    Director Shankar completes 29 years in film industry.He started his film career as an actor. Director S.A.Chandrasekar introduced his an actor. Later he choose director and joined as assistant to S.A.Chandrasekar. Shankar's directional debut Gentlemen becomes huge hit.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X