மகாராஜா மெளலி...நீங்க வேற லெவல்...இப்படி பாராட்டி இருப்பது யார் தெரியுமா?
சென்னை : ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்து விட்டு பலரும் பலவிதமாக பாராட்டி வரும் நிலையில், முக்கிய பிரபலம் ஒருவர் ராஜமெளலியை மகாராஜா என புகழ்ந்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Recommended Video
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர், ஆ,லியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். 550 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக இந்த படம் மார்ச் 25ம் தேதியான நேற்று ரிலீசாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

ஆர்ஆர்ஆர் முதல் நாள் வசூல்
பாகுபலி 2 படத்திற்கு பிறகு ராஜமெளலி இயக்கிய படம் என்பதால் இந்த படத்தின் மீது ஆரம்பம் முதலே அதிகப்படியாக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதை கொஞ்சமும் வீணடிக்காமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது ஆர்ஆர்ஆர் படம். ரிலீசான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 260 கோடிகளை வசூல் செய்துள்ளது. அதிலும் வெளிநாடுகளில் ஹாலிவுட் படங்கள் பலவற்றின் சாதனையை முறியடித்துள்ளது.

ராஜமெளலியை பாராட்டிய ஷங்கர்
ஆர்ஆர்ஆர் படம் பார்த்து விட்டு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் முன்வைத்து வருகின்றனர். ராஜமெளலிக்கு இணையாக பிரம்மாண்ட இயக்குனர் என புகழப்படும் டைரக்டர் ஷங்கரும் ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்து விட்டு, சோஷியல் மீடியாவில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். ராஜமெளலியை இவர் பாராட்டி உள்ள விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

"மகாராஜா" மெளலி
ஷங்கர் தனது ட்விட்டர் பதிவில், அட்டகாசமான, அசத்தலான, வலுவானது. இந்த கர்ஜனை எப்போதும் எதிரொலிக்கும். இப்படி ஒரு ஒப்பிட்டு பார்க்க முடியாத அற்புதமான உணர்வை தந்த ஒட்டுமொத்த டீமுக்கும் நன்றி. ராம் சரணின் அசத்தலான நடிப்பு, திரையை விட்டு கண்ணை நகர விடவில்லை. அனல் பறக்கும் பீம் அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டார். உங்களின் கற்பனையை யாராலும் அடிச்சுக்க முடியாது. பாராட்டுக்கள் "மகாராஜா" மெளலி என குறிப்பிட்டுள்ளார்.

ஆர்சி 15 க்காக வெயிட்டிங்
ஷங்கரின் இந்த பாராட்டிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ராஜமெளலியின் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். அதோடு ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் ஆர்சி 15 படத்திற்காக அடுத்து காத்துக் கொண்டிருப்பதாகவும் ரசிகர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











