twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'Never ever give up' டயலாக் எப்படி வந்துச்சு தெரியுமா? சிவா ஓப்பன் டாக்

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : 'விவேகம்' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியிருக்கிறது. படத்தைப் பற்றி பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

    சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'விவேகம்'. இந்நிலையில், படத்தில் 'Never ever give up' வசனத்தை எழுதியது எப்படி என்று இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.

    சர்வதேச லெவல் படம் :

    சர்வதேச லெவல் படம் :

    தமிழ் சினிமாவின் முதல் சர்வதேச உளவு த்ரில்லர் படம் 'விவேகம்'. கிராமப்புற பின்னணியில் 'வீரம்', நகரத்துப் பின்னணியில் 'வேதாளம்' படத்திற்கு பிறகு ஒரு சர்வதேச படம் ஒன்று பண்ணலாம் என்ற யோசனையை அஜித் சார் தான் கொடுத்தார். இந்தக் கதையை நான்கு மாதங்களில் தயார் செய்தோம்.

    அசுர உழைப்பாளி :

    அசுர உழைப்பாளி :

    'விவேகம்' படத்தில் ஆக்‌ஷனுடன் சேர்ந்து சரியான கலவையில் எமோஷன்களும் இருக்கும். பல்கேரியா, சைபீரியா, க்ரோஷியா, ஸ்லோவேனியா மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். அஜித் சார் மாபெரும் மனிதர் என்பது மட்டுமில்லாமல் அசுர உழைப்பாளி.

    ரசிகர்களுக்கு விருந்து :

    ரசிகர்களுக்கு விருந்து :

    இப்படத்தில் மூன்று பெரிய சண்டைக்காட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் அஜித் சார் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும். சண்டைக் காட்சிகளுக்கு 'டூப்' வைப்பதை அஜித் சார் முற்றிலும் தவிர்ப்பவர். இப்படத்தில் அஜித் சார் செய்த ஒரு அசுர பைக் சண்டைக்காட்சியைப் பார்த்த அதன் ஹாலிவுட் சண்டைப்பயிற்சி இயக்குநர் Kaloyan Vodenicharov அசந்துபோய் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார். ஏனென்றால், அந்த ரோடு பனியிலும் மழை நீரிலும் ஊறி அபாயகரமாக இருந்தது.

    அஜித்தின் பஞ்ச் :

    அஜித்தின் பஞ்ச் :

    இந்தப் படத்துக்காக அஜித் சார் உடற்பயிற்சிக் கூடத்துக்கு மாதக்கணக்கில் சென்று கடும் உழைப்பைப் போட்டுத் தன் உடலைச் செதுக்கியுள்ளார் . அவர் கடைபிடிக்கும் அவரது வாழ்க்கைத் தத்துவமான 'Never Say Die' என்பதை மையமாக வைத்தே இப்படத்தில் 'Never ever give up' என்ற வசனத்தை எழுதினோம். உண்மையான உழைப்பு தரும் பெயரும் வெற்றியும் வேறு எதுவாலும் தர முடியாது.

    எல்லாம் தெரிஞ்சதுதான் :

    எல்லாம் தெரிஞ்சதுதான் :

    எங்கள் முழு அணியும் இரவு பகல் பார்க்காமல் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் போட்டுப் படத்தை எடுத்துள்ளோம். அதனால் இப்படம் மிக அற்புதமாக வந்திருப்பதில் எங்களுக்கு ஆச்சிரியம் இல்லை.' என இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.

    English summary
    Vivegam director siva talks about the origin of that punch dialogue 'Never ever give up'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X