»   »  யார்கிட்ட, முடியுமா?: தனுஷுக்காக 'டான்' அவதாரம் எடுத்த இயக்குனர் சிவா

யார்கிட்ட, முடியுமா?: தனுஷுக்காக 'டான்' அவதாரம் எடுத்த இயக்குனர் சிவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் வட சென்னை படத்தில் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா டான் ஆக நடிக்கிறார்.

வெற்றிமாறன் எழுதி இயக்கி வரும் வட சென்னை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் தனுஷ், விஜய் சேதுபதி, அமலா பால், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா டான் ஆக நடிக்கிறாராம். சிவா தனுஷை வைத்து திருடா திருடி, சீடன் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Siva turns Don for Dhanush

கவுரவ வேடத்தில் வரும் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிக்கிறார் ஆண்ட்ரியா. அவர்களின் காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லையாம். இந்நிலையில் சிவா வட சென்னை படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்கத் துவங்கிவிட்டாராம்.

படத்தில் டேனியல் பாலாஜி, கிஷோர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

English summary
Director Subramaniam Siva is playing the role of don in Dhanush's upcoming movie Vada Chennai.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil