Don't Miss!
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- News
அடேங்கப்பா.. வெறும் 10 ஆண்டில் எம்பிக்களின் சொத்து மதிப்பு 286 சதவீதம் உயர்வு..டாப்பில் பாஜக-லிஸ்ட்
- Finance
அதானி பங்குகள் சரிவு.. எல்லாம் 'அவங்க' பாத்துப்பாங்க.. நிர்மலா சீதாராமன் பதில்..!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரத்தன் டாடா பயோபிக்கை இயக்கவில்லை.. தெளிவுப்படுத்திய சுதா கொங்கரா!
சென்னை : இயக்குநர் சுதா கொங்கரா இறுதிச் சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களை இயக்கி இந்திய அளவில் கவனம் பெற்றவர்.
தற்போது சூரரைப் போற்றுப் படத்தை இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து இயக்கி வருகிறார். படத்தை சூர்யா தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா, சிம்பு உள்ளிட்டவர்களில் ஒருவரை அவர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பொங்கலுக்கு
வெளியாகும்
சூர்யா
42
படத்தின்
டைட்டில்
-பர்ஸ்ட்
லுக்..
5
கேரக்டர்களில்
சூர்யா
கலக்கல்!

இயக்குநர் சுதா கொங்கரா
இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா இந்திய அளவில் மிகச்சிறந்த இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். சூர்யா, அபர்ணா முரளி, கருணாஸ், ஊர்வசி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படம் சிறந்த நடிகர், நடிகை, இசையமைப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் தேசிய விருதுகளை குவித்தது.

சூர்யாவின் கேரியர் பெஸ்ட்
கோபிநாத்தின் பயோபிக்காக வெளியான இந்தப் படம் சூர்யாவின் சினிமா கேரியரில் சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது. ஓடிடியில் வெளியான நிலையிலும் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடினர். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தப் படம் பாலிவுட்டிலும் அக்ஷய் குமார் லீட் கதாபாத்திரங்களில் நடிக்க உருவாகி வருகிறது. படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியில் சூரரைப் போற்று
இந்தப் படத்தை தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்துவரும் சூர்யா, படத்தில் கேமியோ ரோலிலும் நடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் சூர்யாவை வைத்து புதிய படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சிம்புவிற்காக புதிய படத்தில் அவர் இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரத்தன் டாடாவின் பயோபிக்கில் சுதா கொங்கரா?
இதனிடையே அடுத்தப் படத்தை கேஜிஎப், காந்தாரா படங்களை தயாரித்த ஹம்பாலே நிறுவனத்திற்காக சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும் அந்தப் படம் ரத்தன் டாடாவின் பயோபிக்காக உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்தத் தகவலை சுதா கொங்கரா தற்போது மறுத்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், தான் ரத்தன் டாடாவின் தீவிர ரசிகை என்று குறிப்பிட்டுள்ளார்.

பயோபிக்கை இயக்கும் எண்ணமில்லை
ஆனால் அவரது பயோபிக்கை இயக்கும் எண்ணம் இதுவரை இல்லை என்றும் ஆனாலும் தன்னுடைய அடுத்தப் படத்தின் மீது ரசிகர்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி என்று தெரிவித்துள்ள சுதா கொங்கரா, விரைவில் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

பாலிவுட்டில் தமிழ் இயக்குநர்கள் ஆதிக்கம்
பாலிவுட்டில் தமிழ் இயக்குநர்களின் ஆதிக்கம் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பிரபல இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி, தமிழில் வெற்றி பெற்ற தங்களின் விக்ரம் வேதா படத்தை ரீமேக் செய்து வெற்றிப் படைப்பாக கொடுத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது சுதா கொங்கராவின் சூரரைப் போற்று படம் இந்தியில் ரீமேக்காகி வருகிறது.