காரணமில்லாமல் ட்விட்டர் அக்கவுண்ட்டை டெலிட் செய்த வெற்றிமாறன்: ரசிகர்கள் குழப்பத்துக்கு பதில் இங்கே
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
Recommended Video
விஜய் சேதுபதி, சூரி நடித்து வரும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் திடீரென அவரது ட்விட்டர் கணக்கை டெலிட் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அசுர வேகத்தில் வெற்றிமாறன்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான 'அசுரன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் மாஸ் காட்டியது. அதன்பிறகு 'விடுதலை' படத்தை தொடங்கினார் வெற்றிமாறன். விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் என பெரும் கூட்டணியுடன் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு, இளையராஜா இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள விடுதலை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

பிரம்மாண்டமான சண்டைக் காட்சி
'விடுதலை' திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இரண்டாம் பாகத்திலும் 90% படப்பிடிப்பு நிறைவுவடைந்துவிட்டதாகவும், விரைவில் எஞ்சியிருக்கும் காட்சிகளும் முடிந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான சண்டைக்காட்சி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டு இறுதியில் ரிலீஸ்
இந்நிலையில், விடுதலை படத்தில் இயக்குநர் ராஜீவ்மேனன் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது காட்சிகளும் விரைவில் படமாக்கபப்டும் என தெரிகிறது. இதனை அடுத்து விடுதலை படத்தின் முதல் பாகம், இந்தாண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளதால், விடுதலை ஷூட்டிங்கை சீக்கிரமாக முடிக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம்.

ட்விட்டரை டெலிட் செய்தது ஏன்?
விடுதலை, வாடிவாசல் என பரபரப்பாக இருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், திடீரென தனது ட்விட்டர் அக்கவுண்டை டெலிட் செய்துள்ளார். சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் வெற்றிமாறன், திடீரென டிவிட்டரை டீ-ஆக்டிவேட் செய்துள்ளது, ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. ஆனால், ட்விட்டர் அக்கவுண்ட் டெலிட் செய்யப்பட்டதற்கு, பெரிதாக எந்த காரணமும் இல்லையென சொல்லப்படுகிறது. விடுதலை, வாடிவாசல் படத்தின் பணிகள் அதிகம் இருப்பதால், வெற்றிமாறன் இந்த முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











