தியேட்டர் ரிலீசுக்கு தயாராகும் காத்து வாக்குல ரெண்டு காதல்... முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். மேலும் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்தும் உள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் ரிலீஸ் குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்
நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த கூட்டணி முன்னதாக நானும் ரவுடிதான் படத்தில் இணைந்திருந்தது. இந்தப் படம் சிறப்பான வெற்றியை பெற்றது.

இரண்டு நாயகிகள்
இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக சமந்தாவும் நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் 2 பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

திரையரங்குகளில் ரிலீஸ்
இந்தப் படம் ஓடிடியில் ரிலீசாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்றைய தினம் வெளியிட்டுள்ள படக்குழு இந்த அப்டேட்டை தெரிவித்துள்ளது.

பர்ஸ்ட் லுக் வெளியீடு
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதி மூன்று கோணங்களில் காணப்படுகிறார். மேலும் படத்தில் ராம்போ என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஓஹோந்திரன் என்பதில் சுருக்கமாக ராம்போ உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சூட்டிங் நிறைவு
கடந்த ஆண்டில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா உள்ளிட்டவை காரணமாக தள்ளிப் போனது. இந்நிலையில் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் நிறைவடைந்து அடுத்த மாதம் படம் ரிலீசாக உள்ளதாக இந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











