Just In
- 3 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 4 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 4 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 4 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அன்பின் வலிமையை ஆழமாய் பதிவுசெய்யும் “சைவம்”!
சென்னை: தமிழ்நாட்டில் கோடை முடிந்தும் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக குடும்பத்துடன் ரசிக்கும் திரைப்படமாக வெளியாகி உள்ளது இயக்குனர் விஜயின் "சைவம்" திரைப்படம்.
கிராமம் மற்றும் நகர்ப்புற குடும்ப வாழ்க்கை முறைகளையும், அவற்றின் வேறுபாடுகளையும், உறவுகளுக்கு இடையேயான அன்பையும் வெளிக்காட்டியுள்ளது இத்திரைப்படம்.
உறவுகளுக்காக குடும்பமே எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம் என்பதை அழகாக விவரித்துள்ளது இத்திரைப்படம்.

அசைவக் குடும்பம்:
பறப்பதில் விமானம், மிதப்பதில் கப்பல், ஊர்வதில் பேருந்து தவிர மற்ற அனைத்தையும் வெளுத்துக் கட்டும் குடும்பத் தலைவர் நாசர். அவரது அழகான பேத்தி "தெய்வமகள்" சாரா.

இழையோடும் அன்பு:
அசைவமே இல்லாமல் சாப்பாடு இறங்காத குடும்பத்தில், ஆடு, மாடுகளுக்கு கூட அழகாக பெயர் வைத்து அழைக்கும் தேவதைதான் சாரா. அவருடையை செல்லமான சேவல்தான் "பாப்பா". சாராவிற்கும், சேவலுக்கும் இடையிலான அன்பானது அச்சேவல் சாராவைத் தேடிக்கொண்டு பள்ளிக்கே செல்லும் அளவிற்கு நெருக்கமான ஒன்றாக இருக்கின்றது.

திருவிழா கொண்டாட்டம்:
இந்நிலையில் ஊர்த்திருவிழாவிற்காக குடும்பமே ஒன்று கூடுகின்றது. வீட்டில் நடைபெறும் ஒரு சிறு அசம்பாவிதத்தின் போதுதான், ஊர் எல்லைச்சாமிக்கு "பாப்பா" நேர்ந்துவிடப்பட்டது மீண்டும் நாசர் மனைவிக்கு நினைவுக்கு வருகின்றது.

காணாமல் போகும் பாப்பா:
இதனால் அச்சேவலை ஊர் சாமிக்கு பலி கொடுக்க குடும்பமே முடிவெடுக்கின்றது. ஆனால், சேவலோ காணாமல் போய் விடுகின்றது. குடும்பமே சேர்ந்து சேவலை ஊரெல்லாம் தேடுகின்றனர்.

ஜெயிப்பது எது:
ஆனால், கடைசியாக அந்தச் சேவல் என்ன ஆனது? சாராவின் பாசம் வென்றதா என்பதுதான் "சைவம்" படத்தின் கதை. மீதிக்கதையெல்லாம் திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.
நாசரின் மகன் பாட்ஷாவும் இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அத்தை மகளையே சுற்றி சுற்றி வரும் பாத்திரப்படைப்பு இவருக்கு. நகரத்து குட்டிப்பையனாக வரும் ரே-பால் சாராவிற்கு செம ஈடு கொடுத்து நடித்திருக்கின்றார்.

கூடைப்பையா, வைபையா:
பாட்டியிடம் வைபை இருக்கின்றதா என்று கேட்டு அதற்கு பாட்டி "இது கூடைப்பை....இது கோணிப்பை....உனக்கு எது வேண்டும்? " என்ற கேள்வியால் கலகலத்துப் போய் நம்மையும் கலகலப்பாக்குகின்றார்.

இப்படியும் மனிதர்கள்:
நாசரும் - சாராவும் சொல்லவே வேண்டாம் நடிப்பில் விளாசி எடுத்து இருக்கின்றார்கள். ஒரு குழந்தைக்காக ஒரு குடும்பமே அசைவ உணவைக் கைவிட்டு "சைவமாக" மாறும் அழகான உண்மைச் சம்பவத்தை திரையில் பதிவு செய்ததற்காகவே இயக்குனர் விஜய்க்கும், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கும் ஒரு "ஹேட்ஸ் ஆப்".