»   »  சினிமா ஆசையில் வெறும் 500 ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறிய சுந்தர் சி. ஹீரோயின்

சினிமா ஆசையில் வெறும் 500 ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறிய சுந்தர் சி. ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil
வெறும் 500 ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறிய திஷா!

மும்பை: நடிகை திஷா பதானி கையில் வெறும் 500 ரூபாயுடன் மும்பை வந்துள்ளார்.

டோணி படம் மூலம் பிரபலமானவர் திஷா பதானி. அவர் தனது காதலரான டைகர் ஷ்ராஃபுடன் சேர்ந்து நடித்த பாகி 2 படம் ஹிட்டாகியுள்ளது. இதனால் திஷா மகிழ்ச்சியில் உள்ளார்.

சுந்தர் சி.யின் சங்கமித்ரா படத்தில் நடிக்க காத்திருக்கிறார் திஷா. இந்நிலையில் சினிமா பற்றி அவர் கூறியதாவது,

படங்கள்

படங்கள்

நான் சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவள். அதனால் என் படங்கள் ஓடுமா, அடுத்த வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியாது. எனவே நான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பிடிக்கும்

பிடிக்கும்

எனக்கு நடிக்க பிடிக்கும். மீண்டும் மீண்டும் நடிக்க வாய்ப்பு பெற வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு படம் துவங்கும் நேரத்தில் என்னை நீக்கிவிட்டு வேறு ஒருவரை நடிக்க வைத்தார்கள். அது தான் நான் அறிமுகமாகவிருந்த படம்.

வாய்ப்பு

வாய்ப்பு

படங்களில் நிராகரிக்கப்படும்போது அது நமக்கு பலத்தை கொடுக்கிறது. பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை அளிக்கிறது. நான் பாசிட்டிவான ஆள்.

படிப்பு

படிப்பு

நான் கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு மும்பைக்கு தனியாக வந்தேன். கையில் வெறும் 500 ரூபாயுடன் வந்தேன். அந்த பணமும் செலவாக கையில் காசு இல்லாமல் அல்லாடி இருக்கிறேன்.

பணம்

பணம்

மும்பைக்கு வந்த புதிதில் வீட்டு வாடகை கொடுக்க வேண்டுமே என்பதற்காக விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தேன். வேலைக்கு செல்வேன், சம்பாதிப்பேன், வீட்டிற்கு வந்து தூங்குவேன். இது தான் ஒரு காலத்தில் என் வாழ்க்கையாக இருந்தது என்கிறார் திஷா.

English summary
Bollywood actress Disha Patani said in an interview that she came to Mumbai with just Rs. 500 in hand seeking movie offers. She left studies to become a star.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X