»   »  மெய்மறந்தேன் பாராயோ... அஜீத், கமலுடன் நேரடியாக மோதும் சல்மான்

மெய்மறந்தேன் பாராயோ... அஜீத், கமலுடன் நேரடியாக மோதும் சல்மான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பிரேம் ரத்தன் தான் பாயோ திரைப்படம் தமிழில் நேரடியாக டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது. இதன் மூலம் தீபாவளி ரேஸில் கமல் மற்றும் அஜீத்துடன் நேரடியாக மோதுகிறார் சல்மான் கான்.

இந்தத் தீபாவளி தினத்தில் கமலின் தூங்காவனத்துடன், அஜீத்தின் வேதாளம் நேரடியாக மோதுகிறது. இவ்விரண்டு படங்களும் நேரடியாக மோதுவதால் மற்ற படங்கள் போட்டியில் இருந்து பின்வாங்கி இருக்கின்றன.


இந்நிலையில் தனது பிரேம் ரத்தன் தான் பாயோ படத்தை தமிழில் டப் செய்வதன் மூலம் கமல், அஜீத்துடன் சேர்ந்து கோதாவில் குதிக்கக் காத்திருக்கிறார் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான்.


தீபாவளி

தீபாவளி

தீபாவளி என்றாலே மக்களுக்கு புத்தாடை, பலகாரம் இவற்றுடன் புதுப்படங்களும் சேர்ந்தே ஞாபகத்திற்கு வரும். முன்பு போல அக்கம் பக்கத்தினருடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடும் மனநிலையில் நாம் இல்லை. அப்படியே சேர்ந்து கொண்டாட நினைத்தாலும் அதிகரித்து வரும் விலைவாசியால் என் தீபாவளி என் உரிமை என்று தன்னந்தனியே இந்தப் பண்டிகையை கொண்டாடும் மனநிலைக்கு நம்மை மறைமுகமாக விலைவாசி தள்ளி விட்டிருக்கிறது. இதனால் நகரத்தில் வசிப்பவர்கள் மட்டுமின்றி கிராமத்தில் உள்ளவர்கள் கூட புத்தாடை அணிந்தோமா ரைட் அடுத்ததாக புதுப் படம் பார்க்கலாம் என்று திரையரங்குகளை நோக்கிப் படையெடுக்கின்றனர்.


பண்டிகை நாட்களில்

பண்டிகை நாட்களில்

மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு பெரிய நடிகர்கள் தங்களது படங்களை பண்டிகை தினங்களில் வெளியிட்டு நல்ல வசூலைப் பார்த்து விடுகின்றனர். குறிப்பாக படம் வெளியாகும் அந்த நாளின் வசூல் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. இந்த வருடம் தீபாவளி தினத்தில் கமலின் தூங்காவனம், அஜீத்தின் வேதாளம் ஆகிய படங்கள் வெளியாகின்றன.
நேரடியான மோதல்

நேரடியான மோதல்

13 வருடம் கழித்து தங்களின் படங்கள் மூலமாக கமல்ஹாசனும், அஜித்தும் நேரடியாக மோதிக் கொள்வதால் போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தான் தனுஷின் தங்கமகன், சூர்யாவின் 24 ஆகிய படங்கள் போட்டியில் இருந்து பின்வாங்கின.
பிரேம் ரத்தன் தான் பாயோ

பிரேம் ரத்தன் தான் பாயோ

இந்த மோதலில் இதுநாள்வரை மறைமுகப் போட்டியாளராக இருந்து வந்த சல்மான் கான் தற்போது நேரடிப் போட்டியாளராக மாறியிருக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தை தமிழில் நேரடியாக டப் செய்து வெளியிடவிருக்கின்றனர்.


மெய்மறந்தேன் பாராயோ

மெய்மறந்தேன் பாராயோ

தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை படம் நன்றாக இருந்தால் எந்த மொழிப்படம் என்பது குறித்தெல்லாம் கவலை கொள்ள மாட்டார்கள். இதனால் தான் தற்போது சல்மான் கானும் தனது படத்தை மெய்மறந்தேன் பாராயோ என்று டப் செய்து தைரியமாக வெளியிடுகிறார்.


சென்னை

சென்னை

சென்னையைப் பொறுத்தவரை ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என்று எல்லா மொழி ரசிகர்களும் கலந்தே இருக்கிறார்கள். இதனால் தமிழில் மெய்மறந்தேன் பாராயோ, தெலுங்கில் பிரேம் லீலா மற்றும் ஹிந்தியில் பிரேம் ரத்தன் தான் பாயோ என்று 3 மொழிகளிலும் வெளியாகும் இப்படம் சென்னையில் நல்ல வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10 மற்றும் 12ம் தேதிகளில்

10 மற்றும் 12ம் தேதிகளில்

வேதாளம், தூங்காவனம் ஆகியவை நவம்பர் 10 ம் தேதியில் உலகம் முழுவதும் வெளியாகின்றன. அதே நேரம் சல்மானின் பிரேம் ரத்தன் தான் பாயோ எல்லா மொழிகளிலும் நவம்பர் 12ம் தேதியில் வெளியாகிறது.


English summary
Bollywood Superstar Salman Khan's Upcoming Film Prem Ratan Dhan Payo dubbed in Tamil as Meymarandhen Paaraayo. Now Salman Khan to Direct Clash with Ajith's Vedalam and Kamal Haasan's Thoongavanam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil