வேதனையில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள்... இயக்குநர் செல்வராகவன் அட்வைஸ்!

சென்னை: வேதனையில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள் என இயக்குநர் செல்வராகவன் அட்வைஸ் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெய்ன்போ காலனி, புதுப்பேட்டை, ஆயித்தில் ஒருவன். மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

நடிகராகவும் என்ட்ரி கொடுக்கும்

நடிகராகவும் என்ட்ரி கொடுக்கும்

அடுத்ததாக தனுஷை வைத்து நானே வருவேன் படத்தையும் இயக்குகிறார். செல்வராகவன் இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் அறிமுகமாகிறார். கீர்த்தி சுரேஷுடன் சாணிக் காயிதம் படத்தில் நடித்துள்ளார் செல்வராகவன். மேலும் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

யாருக்காக இப்படி டிவிட்டுகிறார்?

யாருக்காக இப்படி டிவிட்டுகிறார்?

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இயக்குநர் செல்வராகவன், அவ்வப்போது தனது அனுபவங்களை பகிரும் வகையில் டிவிட்டி வருகிறார். அதிலும் கடந்த சில நாட்களாக அவர் பதிவிடும் டிவிட்டுகள் ஒரு தினுசாகவே இருந்து வருகிறது. பொதுவாக அப்படி பதிவிடுகிறாரா? அல்லது தனக்கு வேண்டியவர்களை குத்த இப்படி சொல்கிறாரா என்ற கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

மற்றவர்கள் பாவத்தை சுமந்தது போதும்

மற்றவர்கள் பாவத்தை சுமந்தது போதும்

அந்த வகையில் நேற்று பதிவிட்ட டிவிட்டில் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் நான்தான் காரணம் என்று பழி போட்டுக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் பாவத்தை நாம் சுமந்தது போதும் ! என பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள், என்ன ஆச்சு உங்களுக்கு என கேட்டு வந்தனர்.

எந்த முடிவும் எடுக்காதீர்கள்

எந்த முடிவும் எடுக்காதீர்கள்

இந்நிலையில் இன்றும் ஒரு டிவிட்டை பதிவிட்டு கமெண்டுகளை குவித்து வருகிறார். அவர் பதிவிட்டிருப்பதாவது, தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.. என குறிப்பிட்டுள்ளார்.

நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்

நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்

செல்வராகவனின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். செல்வராகவனின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், 100 % உண்மை, என்னுடைய கோபத்தால் அவசர முடிவாலும் என் காதல் என்னை விட்டு பிரிந்துவிட்டது. சற்று நிதானமாக இருந்து இருந்தால் காதல் கை மீறி சென்று இருக்காது.. என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X