அப்போ இவர் ஹாலிவுட் ஸ்டன்ட் நடிகை கிடையாதா...விக்ரம் மிரட்டலில் இதுவும் ஒன்னா?
சென்னை : கமல் நடித்த விக்ரம் படம் ரிலீசுக்கு முன்பு, படம் பார்க்கும் போது மட்டுமல்ல ரிலீசிற்கு பிறகும் பல ஆச்சரியங்களை தந்து கொண்டிருக்கிறது. அப்படி ஒரு ஆச்சரியம் தான் இந்த படத்தில் மிரட்டலான ஒரு கேரக்டரில் நடித்திருக்கும் நடிகை.
படத்தில் மட்டுமல்ல உண்மையிலும் இவர் யார் என்ற உண்மை தெரிந்தாலும் யாராலும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. நம்ப முடியாத ஆச்சரியத்தை தரும் இவர் யார், இவரின் உண்மை முகம் என்ன என்பது பற்றி தான் இங்கே பார்க்க போகிறோம்.

தோண்ட தோண்ட ஆச்சரியம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் மிரட்டலான நடிப்பில் ஜுன் 3 ம் தேதி வெளிவந்துள்ளது விக்ரம் படம். இந்த படத்தில் க்ளைமாக்சில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் வரும் சூர்யா பற்றி தான் மொத்த சோஷியல் மீடியாவும் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் வெளியில் தெரியாமல் பல ஆச்சரியங்களை இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் வைத்துள்ளார் என்பது யாருக்கும் தெரியாது.

என்ன இப்படி மிரட்டியிருக்கார்
விக்ரம் படத்தில் கமலின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணாக காளியம்மாள் என்ற கேரக்டரில் ஒரு பெண் நடித்திருப்பார். கமலின் மருமகளுக்கு துணையாக, உதவியாளராக இருப்பவரை போல் என்ட்ரி கொடுப்பார். ஆனால் ரெளடி கும்பல் வீட்டின் கதவை உடைக்கும் போது தான் தெரியும், அவர் ரா ஏஜன்ட் டீனா என்பது. ரா ஏஜன்ட் மட்டுமல்ல, ரெளடிகளுடன் ஹாலிவுட் நடிகை ரேஞ்சில் மிரட்டலான சண்டை போடுவார். படத்தில் கமலுக்கு வைத்தது போன்று அதே அளவிற்கு இவருக்கும் ஸ்டன்ட் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும்.

யாருங்க இந்த நடிகை
யப்பா...என்னம்மா மிரட்டி இருக்கார் என அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இந்த சண்டை காட்சி அமைந்திருக்கும். ஒரு சில சீன்கள், ஒரு சண்டை காட்சி இதில் மட்டுமே இவர் நடித்திருப்பார். ஆனால் அனைவரையும் மிரள வைத்து இருப்பார். படம் பார்த்த அனைவருமே இவர் ஏதோ ஹாலிவுட் ஸ்டன்ட் நடிகை, ஸ்டன்ட் அசிஸ்டென்ட் போல என நினைத்திருப்பார்கள். ஆனால் உண்மையில் ஹாலிவுட் நடிகையோ, ஸ்டன்ட் கலைஞரோ கிடையாதாம்.

இவர் ஹாலிவுட் நடிகை கிடையாதா
ஏஜன்ட் டீனா கேரக்டரில் நடித்த இவரின் உண்மையான பெயர் வசந்தி. இவர் ஒரு குரூப் டான்சர். விஜய் நடித்த பகவதி, அஜித் நடித்த வில்லன் ஆகிய படங்களில் வரும் கொக்க கோலா பிரவுன் கலர், ஏ ரெமோ ரெமோ ஆகிய பாடல்களில் நடனம் ஆடி இருப்பார். குரூப் டான்சரான இவரைத் தான் தேடிப்பிடித்து லோகேஷ் கனகராஜும், கமல் ஹாசனும் இந்த ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டலாக நடிக்க வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











