Don't Miss!
- News
ராஜ்யசபா ‘தாமரை’ தீம்.. இருக்கைகள் அதிகரிப்பு.. என்ன பிளான்? சர்ச்சையை கிளப்பும் சென்ட்ரல் விஸ்டா!
- Sports
இப்படிலாமா நடக்கும்? உமேஷ் யாதவ் முதுகில் குத்திய நண்பன்.. கூடவே இருந்து குழி பறித்தார்
- Finance
தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கலாம்.. நிபுணர்களின் கவலையளிக்கும் கணிப்பு!
- Lifestyle
கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
இடுப்பழகி சிம்ரனுக்கு மறக்க முடியாத விஜய் படம் இது தானாம்...எத்தனை வருடம் கழித்து சொல்றார் பாருங்க
சென்னை : தனக்கு பிடித்த, விஜய்யுடன் தான் நடித்ததில் மறக்க முடியாத படம் எது என்று பல வருடங்கள் கழித்து நடிகை சிம்ரன் தற்போது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த படமும் இது தான் என கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
பிரபுதேவா நடித்த விஐபி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிம்ரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் 1990.,களில் பிற்பகுதியில் டாப் நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், மாதவன், அர்ஜுன், சூர்யா, விக்ரம், பிரசாந்த், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.
அந்த பரோட்டா காமெடியையும்.. கபடி கிரவுண்டையும் மறக்க முடியுமா? 12 ஆண்டுகளை கடந்த வெண்ணிலா கபடி குழு!

அட இத்தனை வருடம் ஆச்சா
சிம்ரன் விஜய், அஜித் உடன் அதிக படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். அதிலும் விஜய்- சிம்ரம் காம்போவில் உருவான அத்தனை படங்களும் செம ஹிட் ஆகி உள்ளது. விஜய்யுடன் இணைந்து 1999 ம் ஆண்டு சிம்ரன் நடித்த படம் துள்ளாத மனமும் துள்ளும். கதை, பாடல்கள், காமெடி என அனைத்தும் செம ஹிட்டான படம் இது. டைரக்டர் எழில் இயக்கிய முதல் படம் இது. ஜனவரி 29 ம் தேதி ரிலீசான இந்த படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

200 நாட்கள் ஓடிய படம்
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்த இந்த படம் தியேட்டர்களில் 200 நாட்களை தாண்டி ஓடியது. பல விருதுகளையும் இந்த படம் வென்றுள்ளது. விஜய்யை நேரில் பார்க்கும் போது தவறானவனாக நினைத்து வெறுக்கும் சிம்ரன். அதே சமயம் அவரது குரலையும், பெயரையும் மட்டும் கேட்டு உயர்வாக நினைத்து நேசிக்கிறார். சிம்ரனின் காதலை பெறுவதற்காக தான் யார் என்பதை மறைக்கும் விஜய். எதிர்பாராமல் கண் பார்வை இழக்கும் சிம்ரனுக்கு, இறந்த தனது தாயின் கண்களை கொடுத்து உதவுகிறார் விஜய்.

வித்தியாசமான காதல் கதை
அதற்கு பிறகும் தனது கிட்னியை தானம் செய்து சிம்ரனை கலெக்டருக்கு படிக்க வைக்கிறார். எதிர்பாராத விதமாக தீவிரவாதி என தவறாக போலீசாரால் கைது செய்யப்படும் விஜய், மீண்டும் திரும்பி வந்து சிம்ரனை சந்திக்க முயற்சிக்கிறார். ஆனால் விஜய்யை கெட்டவனாகவே பார்த்து பழகியதால், மீண்டும் அவரை கெட்டவனாக நினைத்து கைது செய்ய உத்தரவிடுகிறார். பிறகு விஜய்யின் பாடல் இருவரையும் ஒன்றாக சேர்க்கிறது. பார்க்காமலே காதல் என்பதை மாறுபட்ட கோணத்தில் சொல்லி உள்ள கதை.

டைட்டிலை மாற்றியது இவரா
மணிவண்ணன், தாமு, வையாபுரி, பாரி வெங்கட் ஆகியோர் காமெடியில் பின்னி இருப்பார்கள். எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் பாடல் அனைத்தும் எவர்கிரீன் ஹிட் ஆகின. குட்டி கேரக்டரில் விஜய்யும், ருக்மணி கேரக்டரில் சிம்ரனும் வாழ்ந்திருப்பார்கள். ஆரம்பத்தில் இந்த படத்தில் ருக்மணிக்காக என்று தான் டைட்டில் வைத்தார்கள். பிறகு ஆர்.பி.செளத்ரி தான் துள்ளாத மனமும் துள்ளும் என டைட்டில் மாற்றி வைத்தார். விஜய்க்கு நடிப்பில் பெயர் வாங்கி தந்த எமோஷனல், சென்டிமென்ட் படம் இது.

சிம்ரன் பகிர்ந்த தகவல்
துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆனதை போஸ்டருடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள சிம்ரன், விஜய்யுடன் நான் நடித்ததில் மறக்க முடியாத படம் துள்ளாத மனமும் துள்ளும். இந்த படம் ரிலீசாகி 23 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த அற்புதமான வாய்ப்பை கொடுத்த டைரக்டர் எழில் மற்றும் டீமுக்கு என்னுடைய நன்றிகள் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

எங்களுக்கும் ஃபேவரைட்
சிம்ரனின் இந்த பதிவை பார்த்த பலரும், எனக்கும் பிடித்த படம். ஆல் டைம் ஃபேவரைட் காம்போ. கோலிவுட்டின் சிறந்த ஜோடி. உங்களை மிஸ் பண்ணுறோம். 90 ஸ் கிட்சின் ஃபேவரைட் ஜோடி. ஆல்டைம் ஃபேவரைட் படம். மறக்க முடியாத படம். உங்களின் நடிப்பு. பாடல்கள், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அற்புதமான படம் என ஏராளமானோர் கமெண்ட் செய்துள்ளனர்.