அவதார் 2 ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வருது...இந்தியாவில் எப்போ, எங்கே பார்க்கலாம் தெரியுமா?

சென்னை : அவதார் படத்தின் இரண்டாம் பாகமான அவதார் : தி வே ஆஃப் வாட்டர் படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் இந்தியாவில் வெளியாகும் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதை எங்கு, எப்போது பார்க்கலாம் என்பது பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹாலிவுட் படங்கள் ரிலீசாவது அதிகரித்து வருகிறது. இந்திய மொழிகள் பலவற்றிலும் இந்த படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான அவதார் : தி வே ஆஃப் வாட்டர் படம் டிசம்பர் 18 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மொத்தம் 160 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

அவதார் 2 ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ்

அவதார் 2 ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ்

இதன் முதல் கட்டமாக அவதார் 2 படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட உள்ளது. இந்த படம் இந்தியாவில் தியேட்டர்களில் மட்டுமே வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட உள்ள மிகப் பெரிய படங்களில் ஒன்று Doctor Strange in the Multiverse of Madness. இந்த படம் மே 6 ம் தேதி இந்தியாவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இந்த படத்தோட தான் வருதா

இந்த படத்தோட தான் வருதா

புதிய Marvel படமான இந்த படத்தை தியேட்டர்களில் மட்டுமே பார்க்க வேண்டும். இதற்கு காரணம், இந்த படம் மட்டுமல்ல. இந்த படத்துடன் சேர்த்து தான் அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் திரையிடப்பட உள்ளது. Doctor Strange in the Multiverse of Madness படம் துவங்கப்படுவதற்கு முன் அவதார் 2 படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் திரையிடப்பட உள்ளதாம்.

முன்னாடியே க்ளூ கொடுத்துட்டாங்க

முன்னாடியே க்ளூ கொடுத்துட்டாங்க

கடந்த ஆண்டே Doctor Strange in the Multiverse of Madness படம் ரிலீஸ் செய்யப்பட போதே அவதார் 2 படத்தின் ப்ரீவ்யூ காட்டப்பட்டது. 2009 ம் ஆண்டு வெளியான அவதார் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். SpiderMan : No way Home படத்திற்கு பிறகு Doctor Strange in the Multiverse of Madness ஒரு மேஜிக் அனுபவத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

Doctor Strange in the Multiverse of Madness படத்துடன் சேர்த்து அவதார் 2 படத்தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட உள்ளதால் இந்திய ரசிகர்களுக்கு இது நிச்சயம் ஒரு டபுள் தமாக்காவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் படம் தான் மிக காஸ்ட்லியான படமாக கருதப்படுகிறது. தற்போது அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமும் வெளி வர உள்ளது.

செம தகவலாக இருக்கே

செம தகவலாக இருக்கே

அவதார் படத்தின் சர்வதேச விநியோகம் டிசம்பர் 14 ம் தேதி முதல் துவங்க உள்ளது. ஜேம்ஸ் கேமரூன் எழுதி, இயக்கி உள்ள இந்த படத்தின் 60 சதவீதம் படப்பிடிப்புகள் தண்ணீருக்குள்ளேயே நடத்தப்பட்டதாம். தற்போது படத்தின் வேலைகள் முடிந்து VFX பணிகள் கிட்டதட்ட முடிவடைய உள்ளதாம். டிசம்பர் 16 ம் தேதி வெளிநாடுகளிலும், அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X