விக்ரம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ...கமல் எங்கு பார்க்க போகிறார் தெரியுமா?
சென்னை : ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த திரையுலகம், மீடியாக்கள் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஜுன் 3 ம் தேதி படம் ரிலீசாவதற்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். படத்திற்காக ப்ரொமோஷனும் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதிலும் 5000 தியேட்டர்களில் விக்ரம் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மற்ற கமல் படங்களுடன் ஒப்பிடுகையில் விக்ரம் படம் பிரம்மண்ட ஓப்பனிங்கை பெறும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். ப்ரீ ரிலீஸ் டிக்கெட் புக்கிங்கே 200 கோடிக்கு மேல் நடைபெற்றுள்ளதால், ஓப்பனிங் டே கலெக்ஷன் புதிய சாதனை படைக்கும். விரைவிலேயே இந்த படம் 500 கோடி கிளப்பில் இணையும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வெயிட்டை ஏற்றிய விக்ரம்
2019 ல் விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு கமல் நடித்த படம் தற்போது தான் ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் அரசியலிலும் தீவிரம் காட்டி, அரசியல் கட்சி தலைவராகவும் வளர்ந்து விட்டார் கமல். அடுத்து எப்போது நடிப்பார் என ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்த சமயத்தில் கமல் நடித்த படம் என்பதால் விக்ரம் படத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

10 நாட்களாக ப்ரொமோஷன்
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வரும் கமல் என்பது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா, அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என பல நடிகர்கள் மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளது, கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள படம் ஆகியன படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
நான்கு மொழிகளில் ரிலீசாகும் விக்ரம் படத்திற்காக கடந்த 10 நாட்களாக தீவிர ப்ரொமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் கமல்.

கமல் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்குறாரா
விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ ஜுன் 3 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுகிறது. லேட்டஸ்ட் தகவலின், கமலும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க போகிறாராம். சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரில் தான் கமல், விக்ரம் படம் பார்க்க போகிறாராம். பொதுவாக பெரிய ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்ப்பது கிடையாது.

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்
ஆனால் கமல், தான் நடித்த விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க போகிறாராம். ரசிகர்களுடன் சேர்ந்து கமல் பார்க்க போகும் முதல் படம் இது தான் என்பதால் கோலிவுட்டே பரபரப்பாக காணப்படுகிறது. ரோகினி தியேட்டரில் படம் பார்க்க டிக்கெட் புக் செய்த ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக விக்ரம் படத்துடன், கமலின் தரிசனமும் கிடைக்க போகிறது.


Click it and Unblock the Notifications











