நிவேதா பெத்துராஜின் வருங்கால கணவர் எப்படி பட்டவர் தெரியுமா? அலசி ஆராயும் ஃபேன்ஸ்!

சென்னை: ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தனது தடத்தை பதித்த நிவேதா பெத்துராஜ். தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தனக்கு என தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். இவர் தனது காதலை நேற்று அறிமுகப்படுத்திய நிலையில், இணையவாசிகள் பலரும், நிவேதாவின் வருங்கால கணவர் யார் என்று அலசி ஆராய்ந்து வருகின்றர்.

மதுரையில் பிறந்த நிவேதா பெத்துராஜ், 2015ம் ஆண்டு 'மிஸ் இந்தியா யுஏஇ' பட்டத்தை வென்றார். பின் 2016 ஆண்டு ஆண்டு இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் வெளியான 'ஒரு நாள் ஒரு கூத்து' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தில் ஐடி துறையில் வேலை செய்யும் காவ்யா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்ர். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் உடன் பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்தார்.

நடிகை நிவேதா பெத்துராஜ்: அதன் பின் டிக் டிக் டிக், சங்கத்தலைவன், பொன் மாணிக்கவேல்,திமிரு புடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர்,தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். இவர், கடைசியாக 2023ம் ஆண்டு இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் 'BOO' என்ற ஹாரர் படத்தில் நடித்தார். அதன்பின் நிவேதா பெத்துராஜ் தமிழில் எந்த படத்திலும் தலைகாட்டவில்லை.

Nivetha Pethuraj
Photo Credit:

வருங்கால கணவர்: இந்நிலையில், நிவேதா பெத்துராஜ், தனது இன்ஸ்டாகிராமில், காதலரை கட்டிபிடித்தபடி இருந்த போட்டோவை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த பலர் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும், நடிகை நிவேதா பெத்துராஜின் வருங்கால கணவரான ரஜ்ஹித் இப்ரான் யார் என்பதை இணையவாசிகள் தேடி வருகின்றனர். துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான ராஜித் இப்ரான், மாடலிங் மற்றும் ஃபேஷன் உலகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருக்கிறார். உம்ரா பயணம், சொகுசு கார்கள், ஆடம்பர வாழ்க்கை எனப் பல தருணங்களில் எடுத்த போட்டோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நிவேதா பெத்துராஜும் ராஜித் இப்ரானை போல, கார்கள் பந்தயம் மீது ஈடுபாடு கொண்டவர் என்பதை பல நேர்காணல்களில் சொல்லி இருக்கிறார். இதனால், நிவேதாவும், ராஜித் இப்ரானும் பொருத்தமான ஜோடி என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Nivetha Pethuraj
Photo Credit:

நல்ல ஜோடி : துபாயில் வசித்தாலும், ராஜித் இப்ரான் தமிழ் மீது பற்று கொண்டவராக இருக்கிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பயோவில், "இந்த உலகம் அடுத்த வினாடிக்குள் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்" என்று தமிழில் குறிப்பிட்டு இருப்பதால், நிவேதாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே ராஜித் இப்ரான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துவிட்டார். இந்த ஆண்டுக்குள் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X