காசேதான் கடவுளடா படத்தில் இவர் ரோலில் தான் நடிக்கிறேன்....யோகிபாபு பகிர்ந்த சூப்பர் தகவல்
சென்னை : 1972 ம் ஆண்டு வெளிவந்த காமெடி படம் காசேதான் கடவுளடா. இந்த படம் தற்போது ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் மிர்ச்சி சிவா, யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
பிரியா ஆனந்த் லீட் ரோலில் நடித்து வரும் இந்த படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார். ஜெயம் கொண்டான், இவன் தந்திரன் படங்களை இயக்கிய டைரக்டர் ஆர்.கண்ணன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே Jab We Met என்ற படத்தை தமிழில் கண்டேன் காதலை என்ற பெயரிலும், Delhi Belly படத்தை சேட்டை என்ற பெயரிலும் ரீமேக் செய்து வெற்றி கண்டவர் ஆவார்.

ரீமேக்காகும் காசே தான் கடவுளடா
காமெடி படங்களை இயக்குவதில் வெற்றி கண்ட டைரக்டர் கண்ணன், தற்போது காசே தான் கடவுளடா படத்தை ரீமேக் செய்து வருகிறார். சென்னை ஈசிஆரி.,ல் பங்களா ஒன்றில் இந்த படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது.

ஈசிஆர்.,ல் ஷுட்டிங்
இந்த படம் பற்றி டைரக்டர் கூறுகையில், 1972 ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான படமான இது போன்ற படங்களை மரியாதை செய்யவே, அதே சுவாரஸ்யம் குறையாமல் மீண்டும் எடுக்க முடிவு செய்தேன். பெரும்பாலான கதை வீட்டிற்குள் நடப்பது போன்றே எடுக்கப்பட்டது. ஈசிஆரி.,ல் உள்ள பங்களாவில் இதுவரை 20 நாட்கள் படப்பிடிப்பு நடந்து உள்ளது.

இறுதிக்கட்டத்தில் ஷுட்டிங்
இன்னும் 7 நாட்கள் படப்பிடிப்பு மீதம் உள்ளது. இதில் சிவா மற்றும் யோகிபாபு இடையேயான சண்டைக்காட்சியும் எடுக்கப்பட உள்ளது. இந்த படத்திற்கு சில்வா ஸ்டன்ட் அமைத்து வருகிறார். அத்துடன் படப்பிடிப்பை முடிக்க உள்ளோம் என்றார்.

தீபாவளி ரிலீசா
காசே தான் கடவுளடா படத்தை தீபாவளி ரிலீசாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் அதே சமயத்தில் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளையும் டைரக்டர் கண்ணன் துவக்கி விட்டாராம்.

இது வேற செஞ்சிருக்காங்களா
இந்த படத்தில் சிவா, யோகிபாபு, கருணாகரன் மூவரும் ஊர்வசியின் வீட்டில் இருக்கும் பணத்தை திருட திட்டமிடுவதாக ஒரு சீன் உள்ளதாம். இதற்காக மல்டி பாஸ்வேட் உடனான ஹை டெக் லாக்கர் செட் ஒன்றை ப்ரொடக்ஷன் டிசைனர் ராஜ்குமார் அமைத்துள்ளாராம்.

இவர் ரோலில் தான் யோகிபாபுவா
இந்த படத்தில் தேங்காய் சீனிவாசனின் ரோலில் தான் யோகிபாபு நடிக்கிறாராம். முதலில் அந்த அவரின் கேரக்டரில் நடிக்க தான் மிகவும் பயந்து, தயங்கியதாக யோகிபாபு கூறி உள்ளார். ஆனால் டைரக்டர் கண்ணனும், சிவாவும் தான் நம்பிக்கை கொடுத்து யோகிபாபு நடிக்க வைத்துள்ளனராம்.

கருணாகரனின் 75 வது படம்
மிர்ச்சி சிவா, ரவிச்சந்திரன் நடித்த ரோலிலும், பிரியா ஆனந்த் லட்சுமி நடித்த ரோலிலும் நடிக்கிறாரர்களாம். ஸ்ரீகாந்த் நடித்த ரோலில் தான் கருணாகரன் நடிக்கிறாராம். காசே தான் கடவுளடா 2.0 புதிய வெர்சனின் கதை மிகவும் காமெடியாக, ஜாலியாக உள்ளதாக கருணாகரன் தெரிவித்துள்ளார். இது கருணாகரனின் 75 வது படமாம்.

பாட்டும் ரீமேக்கா
கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்றி இந்த படத்தின் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. பழைய காசே தான் கடவுளடா படத்தில் இடம்பெற்ற ஜம்புலிங்கமே ஜடா ஜடா பாடலையும் இந்த படத்தில் அப்படியே ரீமேக் செய்துள்ளனராம்.


Click it and Unblock the Notifications











