விஜய்யின் Rolls Royce கார் மேல் கண்வைத்த பீஸ்ட் டீம்...அப்படி என்ன இருக்கு அந்த காரில்?

சென்னை : விஜய்யின் Rolls Royce Ghost காரை பார்த்து மற்றவர்கள் ஆசைப்படுவது பெரிய விஷயமில்லை. ஆனால் பீஸ்ட் டீமில் இருந்தவர்களே பல நாட்களாக அந்த கார் மீது ஒரு கண் வைத்திருந்ததை டைரக்டர் நெல்சன் திலீப்குமாரே பேட்டியில் ஓப்பனாக சொல்லி விட்டார்.

Recommended Video

என்னமா கார் ஓட்டறாரு..நம்ம Thalapathy Vijay | Beast | Rolls Royce | Tamil Filmibeat

விஜய் நடித்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ப்ரொமோஷனுக்காக கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு டிவியில் பேட்டி கொடுத்தார் விஜய். அவரை பேட்டி எடுத்தது வேறு யாருமில்லை பீஸ்ட் பட டைரக்டர் நெல்சன் தான். இந்த பேட்டி நேற்று சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.

விஜய் கார் மேல ஒரு கண்ணு

விஜய் கார் மேல ஒரு கண்ணு

பேட்டியின் போது, விஜய் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவரின் Rolls Royce Ghost கார் மீது தனக்கு ஒரு கண் இருந்ததாகவும், அதில் ஒரு முறையாவது போக வேண்டும் என ஆசைப்பட்டதாகவும் விஜய்யிடமே நேரடியாக சொன்னார் நெல்சன். தனக்கு மட்டும் இல்லை பீஸ்ட் டீமில் இருந்த பலருக்கும் இந்த ஆசை இருந்ததாகவும், ஒருநாள் எல்லோரும் பேசி முடிவு செய்து விஜய்யிடம் கேட்டதாகவும் நெல்சன் கூறினார்.

பீஸ்ட் டீமுக்கு கார் ஓட்டிய விஜய்

பீஸ்ட் டீமுக்கு கார் ஓட்டிய விஜய்

விஜய்யும் அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க நெல்சன், சதீஷ், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் ஆகியோரை காரில் ஏற்றி ஒரு ரவுண்ட் கூட்டி போய் உள்ளார். அதுவும் விஜய்யே அந்த காரை ஓட்டிச் சென்றுள்ளார். இந்த வீடியோவை விஜய்யே சொன்னதால் பேட்டியின் போது ஒளிபரப்பு செய்தனர். விஜய் கார் ஓட்ட, பீஸ்ட் டீமில் இருந்தவர்கள் ஜாலி ரைய்டு போன அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் செம டிரெண்ட் ஆனது.

 அப்படி என்ன இருக்கு இந்த காரில்

அப்படி என்ன இருக்கு இந்த காரில்

இத்தனை நாளாக மற்றவர்களுக்கு தான் அந்த கார் மீது ஒரு கண் இருந்தது என்றால், பீஸ்ட் படத்தில் பணியாற்றிய பிரபலங்களுக்கும் அதே ஆசை இருந்துள்ளது. இந்த காரில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்டால் அதன் விலை, சொகுசு, கம்பீர தோற்றம் தான். இந்தியாவில் இந்த கார் 2009 ம் ஆண்டு தான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும்.

விஜய் கார் பற்றி இதெல்லாம் தெரியுமா

விஜய் கார் பற்றி இதெல்லாம் தெரியுமா

Rolls Royce Ghost காரை விஜய் 2012 ம் ஆண்டு முதல் வைத்துள்ளார். இந்த காரின் இன்றைய விலை ரூ.5 முதல் 10 கோடி. விஜய் இந்த காரை ரூ.3.5 கோடிக்கு வாங்கி உள்ளார். துப்பாக்கி படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக விஜய் இந்த காரை வாங்கி உள்ளார். இந்த காரை இந்தியாவில் இறக்குமதி செய்ய வரியே ரூ.40 லட்சம் கட்ட வேண்டும். மிகப் பெரிய கெளரவமாக கருதப்படும் இந்த காரை வைத்திருக்கும் ஒரு சில இந்திய பிரபலங்களில் விஜய்யும் ஒருவர். கோலிவுட்டில் இந்த காரை முதல் முறையாக டைரக்டர் ஷங்கர் தான் வாங்கி இருந்தார். அவருக்கு பிறகு தான் விஜய் வாங்கி உள்ளார்.

இவ்வளவு இருக்கா இதில்

இவ்வளவு இருக்கா இதில்

இந்த கார் தவிர ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற காஸ்ட் கார்களையும் விஜய் வைத்துள்ளார். 570 Bhp திறன் கொண்ட V12 டர்போ ரக என்ஜினை கொண்ட கார். ஆட்டேமெடிக் பெட்ரோல் என்ஜின் கொண்டது. லிட்டருக்கு 14.8 கி.மீ., வரை மைலேஜ் கொடுக்கக் கூடியதாகும். 21 லிட்டர் பெட்ரோல் போட்டால் 100 கிமீ வரை செல்ல முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X