பீஸ்ட் மூன்றாவது சிங்கிள் எப்படி இருக்கு?...இந்த படங்கள் நினைவில் வந்து போனதா?

சென்னை : பீஸ்ட் படத்தின் முதல் இரண்டு சிங்கிள்கள் செம ஹிட்டாகி, யூட்யூப்பில் சாதனையே படைத்தன. இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட மூன்றாவது சிங்கிள் எப்படி இருந்தது என்பது பற்றிய பெரிதாக யாரும் பேசியதாக தெரியவில்லை.

பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், ஷைன் சாக்கோ, யோகிபாபு, கிங்ஸ்லே உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.

எல்லா பாடலும் மாஸ் ஹிட்

எல்லா பாடலும் மாஸ் ஹிட்

ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டதால் காதலர் தினத்தன்று ஃபர்ஸ்ட் சிங்கிளாக அரபிக்குத்து பாடலும், மார்ச் மாதத்தில் செகண்ட் சிங்கிளாக ஜாலியோ ஜிம்கானா பாடலும் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து பீஸ்ட் டிரைலரும் வெளியிடப்பட்டது. இவை மூன்றுமே வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வைகளை பெற்றது. அதே சமயம் டிரைலரை பார்த்து விட்டு இது பல படங்களின் காப்பி என்ற விமர்சனமும் முன் வைக்கப்பட்டது.

கடுப்பாக்கிய மூன்றாவது சிங்கிள்

கடுப்பாக்கிய மூன்றாவது சிங்கிள்

இவற்றை தொடர்ந்து நேற்று பீஸ்ட் மூன்றாவது சிங்கிளும் வெளியிடப்பட்டது. திரை தீப்பிடிக்கும் என துவங்கும் இந்த பாடலும் வெளியிடப்பட்ட ஒரு நிமிடத்திலேயே 25,000 பார்வைகளை பெற்றது. பொதுவாக படங்களில் முதல் இரண்டு சிங்கிள்களுக்கு இருக்கும் வரவேற்பு மூன்றாவது சிங்கிளுக்கு இருக்காது தான். இருந்தாலும் விஜய் படம் என்பதால் இதை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே

எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே

ஆனால் பீஸ்ட் மூன்றாவது சிங்கிளில், டிரைலரில் காட்டப்பட்ட பெரும்பாலான காட்சிகள் மீண்டும் இடம்பெற்றன. அதனால் பெரிய அளவில் இது ஈர்க்கவில்லை. ஈர்ப்பை ஏற்படுத்தாவிட்டாலும், மூன்றாவது சிங்கிளை பார்க்கும் போது பல படங்களின் நினைவுகள் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை. அதிலும் பல பிரபலமான படங்கள், விஜய்யின் முந்தைய படங்களில் வந்ததையே பீஸ்ட் படத்திலும் காப்பி அடித்துள்ளார்கள் என்பதை சொல்லாமல் இருக்க முடியாது.

 அட இத கவனிக்கலியோ

அட இத கவனிக்கலியோ

மூன்றாவது சிங்கிளில் விஜய்யின் என்ட்ரியை காட்ட வெல்டிங் மிஷினால் அவரது உருவம் அச்சு காட்டப்படும். இதே சீன் விஜய்யின் சிவகாசி படத்திலும் அவரின் என்ட்ரியின் போது கடைக்குள் வைத்து பூட்டப்பட்ட விஜய், வெல்டிங் மிஷினால் ஷட்டரை உடைத்துக் கொண்டு வருவதை நினைவுபடுத்துகிறது. அதே போல் குறைந்த வெளிச்சத்தில் சுரங்கத்திற்குள் விஜய் நிற்கும் காட்சிகள் கத்தி படத்தில் தண்ணீர் குழாயிற்குள் முதியவர்களுடன் போராட்டம் நடத்தும் சீனை நினைவுபடுத்துகிறது.

Recommended Video

என்னமா கார் ஓட்டறாரு..நம்ம Thalapathy Vijay | Beast | Rolls Royce | Tamil Filmibeat
இதையெல்லாம் கவனிச்சீங்களா

இதையெல்லாம் கவனிச்சீங்களா

தளபதி விஜய் என்ற டைட்டில் கார்டு துப்பாக்கிகள் சுற்றி இருப்பதை போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் ரஜினியின் 2.0 படத்தில் ரோபோ சிட்டி நிறைய துப்பாக்கிகளுடன் நிற்கும் காட்சிகளை நினைக்க வைக்கிறது. துப்பாக்கி குண்டுகள் பறக்க, விஜய் அதை ஷீடால் மறைத்த படி வருவது கமலின் விக்ரம் பட டீசரை நினைவுபடுத்துகிறது. இவற்றை எல்லாம் படக்குழு எப்படி கவனிக்காமல் விட்டார்கள் என ஆச்சரியமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X