பிரியங்கா மோகனோட ஆல்-டைம் பேவரிட் ஹீரோ யார்ன்னு தெரியுமா... அவங்களே சொல்லியிருக்காங்க!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் பிரியங்கா மோகன். இந்தப்படம் வரும் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பிரமோஷன்கள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகமாக காணப்படுகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்த நிலையில், அந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

டான் படம்

டான் படம்

இதையடுத்து தற்போது மீண்டும் அவரது தயாரிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள டான் படம் வரும் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். படத்தில் பள்ளி மாணவனாக அவர் நடித்துள்ள சில சீன்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 காமெடி கலாட்டா

காமெடி கலாட்டா

வழக்கமாக கல்லூரிப் படங்களை போலவே காமெடி கலாட்டாக்களுடன் இந்தப் படம் உருவாகியுள்ளதாகவும் படம் குறித்து அதிகமாக எதிர்பார்க்க வேண்டாம் என்றும் சிபி சக்ரவர்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் முன்னதாக பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். அவருடன் சிவாங்கி, பால சரவணன் உள்ளிட்டவர்களும் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர்.

சிறப்பான பிரமோஷன்கள்

சிறப்பான பிரமோஷன்கள்

படத்தில் புரபசராக எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார். படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ளதால் படத்தின் பிரமோஷனையொட்டி பேட்டிகளை படக்குழுவினர் அளித்து வருகின்றனர்.

சர்க்காரு வாரி பட்டாவுடன் மோதும் டான்

சர்க்காரு வாரி பட்டாவுடன் மோதும் டான்

வரும் மே மாதம் 12ம் தேதி மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பட்டா படம் ரிலீசாக உள்ளது. இதற்கு மறுநாள் டான் படம் ரிலீசாக உள்ளதால் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளன. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது முறையாக ஜோடியாகியுள்ளார் பிரியங்கா மோகன்.

சிறப்பான கெமிஸ்ட்ரி

சிறப்பான கெமிஸ்ட்ரி

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகனின் கெமிஸ்ட்ரி சிறப்பாக வொர்க் அவுட் ஆன நிலையில் தற்போது இந்த ஜோடி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் படத்தின் பிரமோஷன்களில் பிரியங்கா மோகனும் ஈடுபட்டுள்ளார்.

ஆல்-டைம் பேவரிட் ஹீரோ

ஆல்-டைம் பேவரிட் ஹீரோ

அவரது பேட்டியொன்றில் தனது ஆல் டைம் பேவரிட் ஹீரோ குறித்து அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவரது பேவரிட் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அவர் கூறியுள்ளார். நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X