»   »  'கெஞ்சி கேட்கிறேன்... என் படத்தைக் கொன்னுடாதீங்க...! - துல்கர் சல்மான் உருக்கம்!

'கெஞ்சி கேட்கிறேன்... என் படத்தைக் கொன்னுடாதீங்க...! - துல்கர் சல்மான் உருக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சின் : கடந்த வியாழனன்று துல்கர் சல்மான் நடித்த 'சோலோ' படம் மலையாளம் மற்றும் தமிழில் வெளியானது. நிலம் நீர், காற்று, நெருப்பு என நான்கு கதைக்களத்தில் உருவான நான்கு குறும்படங்களை இணைத்து ஆந்தாலாஜி வகைப் படமாக 'சோலோ' உருவாக்கப்பட்டுள்ளது.

சில உண்மைச் சம்பவங்களை மையமாக கொண்டு உருவான இந்தப்படத்தில் இடம்பெற்ற சில குறும்படங்களுக்கான முடிவு ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதனால் படம் ரிலீஸான பின்னர், இயக்குனர் பிஜோய் நம்பியாரின் அனுமதி இல்லாமலேயே தயாரிப்பு நிறுவனம் க்ளைமாக்சில் சில மாற்றங்களைச் செய்து தியேட்டர்களுக்கு அனுப்பியது.

படத்தைக் கொல்லாதீர்

இந்நிலையில் இதுகுறித்து படத்தின் ஹீரோ துல்கர் சல்மான், 'தயவு செய்து சோலோவை கொன்றுவிடாதீர்கள்' என்கிற உருக்கமான வேண்டுகோளுடன் ரசிகர்களுக்கு நீண்டதொரு பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார்.

உழைப்பு

உழைப்பு

'இந்தப் படத்திற்காக எனது மனதையும், ஆன்மாவையும் அளித்திருக்கிறேன். குறைந்த பட்ஜெட்டில் தரமான படத்தை எடுப்பதற்காக நாங்கள் எங்கள் ரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி உழைத்திருக்கிறோம்.

வித்தியாசம்

வித்தியாசம்

இந்தப் படம் 'பெங்களூரு டேஸ்', 'சார்லி' போன்று இல்லை, இதில் ஏன் நடித்தீர்கள் என என்னிடமே கேட்கிறார்கள். அது வித்தியாசமாக இருந்ததால்தான் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன், நிஜத்தில் நடந்த நிகழ்வுகள் அடிப்படையில் பல விஷயங்கள் உள்ளன. அதை யாரும் தவறாகப் பேசவேண்டாம்.

முயற்சியை கொச்சைப்படுத்த வேண்டாம்

முயற்சியை கொச்சைப்படுத்த வேண்டாம்

எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டவேண்டும் என எதிர்பார்க்கும் ரசிகர்கள், அப்படி ஏதாவது வித்தியாசமான முயற்சியை மேற்கொள்ளும்போது, அது பிடிக்காமல் போனால் உற்சாகப்படுத்தாவிட்டாலும், ஊக்கம் தராவிட்டாலும், அந்த முயற்சியைக் கொச்சைபடுத்துவதை விட்டுவிட்டு, அதை அப்படியே கடந்து செல்லலாமே.

படத்தைக் கொல்வது

படத்தைக் கொல்வது

மலையாள சினிமா வரலாற்றிலேயே ஓர் இயக்குனரின் அனுமதி இல்லாமல் படம் வெளியானபின், வெட்டி ஒட்டி வெளியிடுவது இதுதான் முதன்முறையாக இருக்கும். இதுவும் ஒருவகையில் படத்தைக் கொல்வது போலத்தான். தயவுசெய்து 'சோலோ'வை கொல்லாதீர்கள்' என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் துல்கர் சல்மான்.

English summary
Last Thursday, 'Solo' starring dulquer Salman was released. Many commented that some of the scenes in the film are not acceptable. In this situation, dulquer has pleaded with facebook post , 'Please don't kill Solo'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil