twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இனிமேல் கண்ணை சுருக்கி முகத்தை இப்படி வச்சுக்காதீங்க..கதிரவனை கடுப்படித்த கமல்

    |

    சென்னை: கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை வெகு சுவாரஸ்யமாக கொண்டுச் செல்கிறார். அதே நேரம் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கிறார்.

    பிக்பாஸ் சீசன் 6 தொடங்கியதிலிருந்தே அதை சுவாரஸ்யமாக கொண்டுச் செல்ல கமல் மிகுந்த அக்கறை எடுப்பதை காண முடிகிறது.

    சீசன் 5-ல் தாமரையைத்தவிர பெரும்பாலானோர் மிக்சர் சாப்பிட்டப்படி இருக்க அதை கண்டிக்காததால் விமர்சிக்கப்பட்டார் கமல். அதை இப்போது சரி செய்து வருகிறார்.

     கமல்-68..தமிழ் திரையுலகின் நாட் அவுட் நாயகன் கமல்ஹாசன் கமல்-68..தமிழ் திரையுலகின் நாட் அவுட் நாயகன் கமல்ஹாசன்

     மிக்சர் பார்ட்டிகள் நிறைந்த சீசன் 5

    மிக்சர் பார்ட்டிகள் நிறைந்த சீசன் 5

    பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்றவர்கள் பெரும்பாலானோர் கருத்துச் சொல்லாமல் கோஷ்டி அமைத்துக்கொண்டு செயல்பட்டனர். டைட்டில் வென்ற ராஜு ஒரு இடத்தில் கூட தனது கருத்தை பதிவு செய்யாமல் எல்லோருக்கும் நல்லவர் போல் மிக்சர் பார்ட்டியாக வலம் வந்தார். தாமரை உள்ளிட்ட சிலர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் நியாயத்தை பேசினர். அவர்கள் அவர்களாக இருந்தனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான ஆர்வம் குறைந்தது. சமூக வலைதளங்களில் விமர்சனம் அதிகமானது. இதை சீசன் 6 தொடங்கியபோது கவனத்தில் எடுத்துக்கொண்ட பிக்பாஸ் ஆரம்பத்திலிருந்தே டாஸ்க் கொடுத்து சுவாரஸ்யமாக்கினார்.

     கூர்ந்து கவனிக்கும் பிக்பாஸ் டீம்..வாரவாரம் ஆரவாரம்

    கூர்ந்து கவனிக்கும் பிக்பாஸ் டீம்..வாரவாரம் ஆரவாரம்

    கமல்ஹாசன் வாரா வாரம் வரும் இரண்டு நாட்கள் பார்வையாளர்கள் அதிகரிப்பார்கள். காரணம் கமல்ஹாசனின் பேச்சு அவர் சொல்லும் கருத்து, கண்டிக்க வேண்டியவர்களை கண்டிப்பது, தட்டிக்கொடுக்க வேண்டியவர்களை தட்டிக்கொடுப்பது என அவரது நடவடிக்கைக்காக அதிக அளவில் பார்வையாளர்களை கொண்டுவரும். இதனால் இந்த சீசன் தொடங்கியது முதலே சமூக வலைதளங்கள், ஊடகங்களில் வரும் விமர்சனங்களை கவனிக்க தொடங்கியது பிக்பாஸ் டீம் இதை வாரா வாரம் கமலின் நிகழ்ச்சியில் காண முடிந்தது. பெண்கள், திருநங்கைகள் சமூகத்தை அவதூறு செய்த அசீம் கடுமையாக கண்டிக்கப்பட்டார்.

     அசீமுக்கு பாராட்டு..மற்றவர்களை தாளித்து எடுத்த கமல்

    அசீமுக்கு பாராட்டு..மற்றவர்களை தாளித்து எடுத்த கமல்

    இந்த வாரம் அசீம் நடத்தை சரியாக இருந்ததால் பாராட்டப்பட்டார். அதே நேரம் கோபத்தில் எடுத்தெறிந்து பேசிய தனலட்சுமியை கமல் கண்டித்தார். கோஷ்டி சேர்ந்து கார்னர் செய்த மைனா, மகேஸ்வரி, மணிகண்டன், ஏடிகே லைட்டாக சுட்டிக்காட்டப்பட்டனர். வீட்டை ஒழுங்கற்று வைத்திருந்த ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கண்டிக்கப்பட்டனர்.கோபத்தில் கப்பை உடைத்த ஜனனி கண்டிக்கப்பட்டார். இது பிக்பாஸ் வீடு, விருந்தினராக வந்துள்ளீர்கள் பொருட்களை உடைப்பது கூடாது என அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

     கதிரவன் அப்படி முகத்தை வைத்துக்கொள்ளாதீர்கள்- கமல்..அட இவராலேயே தாங்க முடியவில்லையே

    கதிரவன் அப்படி முகத்தை வைத்துக்கொள்ளாதீர்கள்- கமல்..அட இவராலேயே தாங்க முடியவில்லையே

    கமல்ஹாசன் கண்டிக்காமல் விட்ட ஒருவருக்கும் நேற்று டோஸ் விழுந்தது. அவர் கதிரவன். எப்போது கழுவுகிற மீனில் நழுவுகிற நபராக அனைவருக்கும் நல்லவர் போல் முகத்தை வைத்துக்கொண்டு கேமரா சென்ஸுடன் இயங்கிக்கொண்டு எந்த நியாயத்தையும் கேட்காமல் வலம் வந்த கதிரவனை கமல் நாசுக்காக மிக்சர் பார்ட்டியில் உங்கள் பெயர் அதிகம் வந்திருக்கும் என எதிர்ப்பார்த்தேனே என சுட்டிக்காட்டினார். அவரது கண்ணை மூடி வாயை குவித்து சிரிக்கும் ஒரேவித முகபாவனை பார்வையாளர்களை எரிச்சல் மூட்டும். அது கமலையும் பிக்பாஸ் டீமையும் எரிச்சல் மூட்டியிருக்கும்போல அதை செய்துக்காட்டி ஒரே மாதி திட்டும்போதும் பாராட்டும்போதும் செய்கிறீர்கள் அதை இனி செய்யாதீர்கள், மிகசர் பார்ட்டியாக இருக்காதீர்கள் என்று கமல் சுட்டிக்காட்டினார். அதற்கும் அதே ரியாக்‌ஷனை கொடுத்து கதிரவன் ஓக்கே சொன்னதுதான் ஹைலைட்.

    English summary
    Kamal Haasan is making the show Bigg Boss very interesting. At the same time he reprimands where reprimand is due. Ever since the start of Bigg Boss season 6, we can see that Kamal is taking great care to make it interesting. In season 5, Kamal was criticized for not condemning most of the people for mixer Parties except Tamarai . He is fixing it now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X