twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிடிக்கலன்னா விமர்சனம் எழுதாதீங்க...- இது இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் கோரிக்கை!

    By Shankar
    |

    சென்னை: உங்களுக்கு ஒரு படம் பிடிக்காவிட்டால், அந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதாதீங்க, என்று அதிரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன்.

    விளம்பரம் இல்லாத படத்துக்கு அதிரடி விளம்பரம் தேடும் மேடைகளாக மாறி வருகின்றன ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மேடைகள்.

    நேற்று நடந்த மெய்யழகி பட விழாவும் கூட அப்படித்தான் மாறிப் போனது. வெறுமனே மெய்யழகி பட ட்ரைலர் வெளியானது என்று செய்தி வெளியிட வேண்டிய மேடை, விக்ரமன், தேவயாணி, சோனா போன்றவர்களின் பேச்சுக்காக மூன்று நான்கு செய்திகள் வெளியிடும் அளவுக்கு ஆகிப் போனது.

    Don't write review if you not liked a movie, says Vikraman

    இதனை தெரிந்து வைத்துக் கொண்டு, அதிரடியாக எதையாவது பேசி வைக்கிறார்கள் விழாவுக்கு வரும் விஐபிகள்!

    இந்த மெய்யழகி பட ட்ரைலர் வெளியீட்டுக்கு வந்தவர்களில் இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் அப்படித்தான் பேசி வைத்தார்.

    சிறு பட்ஜெட் படங்களை கைதூக்கி விட பத்திரிகையாளர்களால்தான் முடியும் என்றும், அவர்களால் விளம்பரங்களுக்கு அதிகம் செலவழிக்க முடியாது என்பதையும் சொல்லிக் கொண்டு போனவர், திடீரென்று ஒரு கோரிக்கையை வைத்தார்.

    விமர்சனம் எழுதாதீங்க...

    "நானெல்லாம் ஒரு படத்துக்குப் போறதுக்கு முன்னாடி, அந்தப் படம் குறித்து பத்திரிகைகளில் வந்துள்ள அத்தனை விமர்சனங்களையும் படிச்சி முடிச்சிட்டுதான் போவேன். இப்போ தீபாவளிக்கு வந்த படங்களுக்குக் கூட விமர்சனம் படிச்சிட்டுதான் பார்க்கப் போனேன்.

    நான் மட்டுமல்ல, என்னை மாதிரி பலரும் விமர்சனங்களைப் படிச்சிட்டுதான் படம் பாக்கப் போறாங்க. அதனால விமர்சனங்கள்தான் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்குது.

    குறிப்பா சின்ன பட்ஜெட் படங்களுக்கு விமர்சனங்கள், அதுவும் பாசிட்டிவா வர்றது ரொம்ப முக்கியம்.

    பத்திரிகையாளர்களுக்கு இந்த இடத்தில் ஒரு வேண்டுகோள்.. ஒரு படத்தைப் பார்த்து நல்ல முறையில் விமர்சனம் எழுதுங்க. உங்களுக்கு அந்தப் படம் பிடிக்கலன்னா தயவு செஞ்சி விமர்சனமே எழுதாதீங்க. இதை நான் கட்டளையா சொல்லல," என்றார்.

    இதென்ன கூத்து...

    பொதுவாகவே விக்ரமன் மீது அனைத்துப் பத்திரிகையாளர்களிடமுமே நல்ல அபிப்பிராயம் உண்டு. அவர் விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசியிருப்பது வியப்பைத் தருகிறது.

    சின்ன ஊசி என்பதற்காக கண்ணில் செல்லமாக குத்திக் கொள்ளவா முடியும்? விமர்சனம் என்பதே நிறை குறைகளைச் சொல்வதுதானே...

    நல்ல படம் எடுக்க முடியலன்னா சும்மா இருங்கன்னு ரசிகர்கள் சொன்னா இயக்குநர்கள், சின்ன படத் தயாரிப்பாளர்கள் கேட்டுப்பாங்களா..!!

    English summary
    Director Vikraman requested media not to review any small budget movie, if they don't like it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X